அடுத்த 5 ஆண்டுகளில் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை: மோடி| Dinamalar

அடுத்த 5 ஆண்டுகளில் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை: மோடி

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (13)
Share
புதுடில்லி: தற்போது 18 நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் சேவை, 2025ம் ஆண்டுக்குள் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி டில்லியில் இன்று (டிச.,28) கொடியசைத்து துவக்கி வைத்தார். 37 கி.மீ. தூரம் கொண்ட மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில்
MetroTrain, PrimeMinister, Modi, மெட்ரோ, மோடி, பிரதமர், நரேந்திர மோடி

புதுடில்லி: தற்போது 18 நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் சேவை, 2025ம் ஆண்டுக்குள் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி டில்லியில் இன்று (டிச.,28) கொடியசைத்து துவக்கி வைத்தார். 37 கி.மீ. தூரம் கொண்ட மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமான இந்த ரயில் சேவையை காணொலி வாயிலாக துவக்கி வைத்து மோடி பேசியதாவது: நாட்டின் முதல் மெட்ரோ ரயில் வாஜ்பாயின் முயற்சியால் துவங்கப்பட்டது. 2014ல் எங்கள் அரசு அமைந்த போது ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவைகள் இருந்தன, இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.


latest tamil news


2025க்குள் இதை நாங்கள் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் விரிவுபடுத்தப்படும். 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் டில்லி ஒரு பெரிய உலகளாவிய நிதி மற்றும் மூலோபாய சக்தியின் தலைநகராகும். இந்த மகிமை இங்கே பிரதிபலிக்க வேண்டும். நாம் அனைவரும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். டில்லி மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X