இந்தியாவில் 'டெஸ்லா' கார் :அடுத்த ஆண்டு அறிமுகம்

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில், 'டெஸ்லா' நிறுவனத்தின், 'மாடல் - 3' ரக மின்சார கார், அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், 'எலெக்ட்ரிக் கார்' எனப்படும், மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மின்சார கார்கள், பல நாடுகளில் விற்பனையாகி வருகின்றன. இதற்கிடையே, 2016ம் ஆண்டு, டெஸ்லா
Tesla Model 3 India Launch By June 2021 - Bookings Open Next Month

புதுடில்லி : இந்தியாவில், 'டெஸ்லா' நிறுவனத்தின், 'மாடல் - 3' ரக மின்சார கார், அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், 'எலெக்ட்ரிக் கார்' எனப்படும், மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மின்சார கார்கள், பல நாடுகளில் விற்பனையாகி வருகின்றன.


latest tamil newsஇதற்கிடையே, 2016ம் ஆண்டு, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை, இந்தியாவில் விற்பனை செய்ய, முடிவு செய்யப்பட்டது. எனினும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அந்த கார் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை.இதற்கிடையே, கடந்த அக்டோபரில், டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 'அடுத்த ஆண்டு, இந்தியாவில் டெஸ்லா மின்சார கார்கள் விற்பனை செய்யப்படும்' என, கூறி இருந்தார்.
இந்நிலையில், அவரின் அந்த அறிக்கை, தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில், அடுத்த ஆண்டு ஜூனில், டெஸ்லா மாடல் - 3 ரக கார், அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு, அடுத்த மாதம் முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் - 3 ரக கார், 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-டிச-202010:07:36 IST Report Abuse
ஆரூர் ரங் ஹம்மர் காரும் மின்சாரத்தில் ஓடுமானால் சுடலை😎 திருடர் மகிழ்வார்
Rate this:
Cancel
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
29-டிச-202009:42:24 IST Report Abuse
A NATARAJAN அப்போ நம்ம ஊரு மாருதி அம்புட்டு தானா? அந்த கம்பெனியவும் ஊத்தி மூட போறீங்களா? வெளி நாட்டு பொருட்களை வாங்க கூடாது -ன்னு சொல்றது எல்லாம் ஒரு பாசாங்கு போல இருக்கு. அந்த காந்தி மஹானும் இத சொல்லி தான் சுதந்திரம் வாங்கினார். ஆனால் அதுக்கு அப்புறம் எவனும் அதை கண்டுக்கிடலை. ..
Rate this:
sam - Bangalore,இந்தியா
04-ஜன-202119:59:53 IST Report Abuse
samTesla car cost is close to 55Lakhs .....
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஆக இப்படியாக கரணட் வண்டிகளை கொண்டு வந்து பல லட்சம் சிறுபான்மையினர் மெக்கானிக் குகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கிறார்கள். கரண்ட் வண்டிக்கு சார்ஜ்க்கு எங்கே போவது? ஆக கரண்ட் பில்லை யூனிட் 50 ரூபாய் கொண்டு வந்து விடுவார்கள். எங்கள் தள்ளபதி கரணட் வண்டிகளுக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தினால் தான் சங்கிகள் அடங்குவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X