திருப்பூர்: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி முதல்வர் பழனிசாமி தேர்தல் பிசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.
வெற்றி நடை போடும் தமிழகம்
வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் அதிமுக தேர்தல் பிரசாரத்தை நாளையில் இருந்து தொடங்குகிறது. முதல்வர் பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்கு முன்னதாக,இன்று கோவை வந்திருந்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான அறிக்கை வெளியிட்டார் மா.சுப்பிரமணியம். ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது. சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்...துரைமுருகன் தயாராக உள்ளாரா? புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுக-வை விமர்சிப்பதா? மின்னனு டெண்டர் முறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. திரைமறைவில் டெண்டர் கொடுத்தது திமுக ஆட்சியில் தான். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கவர்னரிடம் பொய்யான ஊழல் புகார் கொடுத்துள்ளனர். திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிப்பில் கமல்ஹாசன் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோ தான். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

சேலம் செல்லும் வழியில் திருப்பூர் அருகே பேசியது, சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக பொய்யான தகவல் வெளியாகியுள்ளது. அவிநாசியில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தப்படாது என அவர் கூறினார்.
நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. தி.மு..க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் நிறைவேறாத திட்டங்கள் தான். மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதை தி.மு.க. தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. விவசாயிகளுடன் என்னை பற்றி விமர்சித்து விவசாயிகளை ஸ்டாலின் கொச்சை படுத்துகிறார்.
அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணிகளை மார்ச் மாதம் துவக்கி வைக்க உள்ளேன். பார்லிமென்டிற்கு சென்று ஒரு நல்லது கூட செய்யாதவர்கள் திமுக எம்.பி.,க்கள் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE