சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

வயதான காலத்தில் தேவையா?

Added : டிச 28, 2020
Share
Advertisement
வயதான காலத்தில் தேவையா?'ஏற்கனவே கட்சிக்குள் கோஷ்டி பூசல், பற்றி எரிகிறது. இதில் இவர் வேறு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் பற்றி, எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள்.திக்விஜய் சிங், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர். நேரம் காலம் தெரியாமல், ஏடாகூடமாக பேசி,

அக்கம் பக்கம்


வயதான காலத்தில் தேவையா?



'ஏற்கனவே கட்சிக்குள் கோஷ்டி பூசல், பற்றி எரிகிறது. இதில் இவர் வேறு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் பற்றி, எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள்.
திக்விஜய் சிங், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர். நேரம் காலம் தெரியாமல், ஏடாகூடமாக பேசி, சர்ச்சையில் சிக்குவது, இவரது வழக்கம். சமீப காலமாக, கட்சியில் இவருக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. இதனால், இருக்கும் இடம் தெரியாமல், அமைதி காத்து வந்தார். அப்படியே தொடர்ந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்; ஆனால், மீண்டும் சர்ச்சை தீயைப் பற்ற வைத்துள்ளார். 'பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களின் விவசாயிகள், மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய பிரதேச விவசாயிகள் அமைதியாக உள்ளனர். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காங்கிரஸ் நிர்வாகிகள், துாங்கி வழிகின்றனர்' என, சமீபத்தில் திருவாய் மலர்ந்தார்.
மேலும், 'ம.பி., மாநில காங்கிரசார், கும்பகர்ணன் போல் துாங்கி வழிகின்றனர். இப்படி இருந்தால் கட்சி உருப்படுமா' என்றும், சாபம் விட்டுள்ளார். திக்விஜய் சிங்கின் இந்த பேச்சு, ம.பி., மாநில காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'வயதான காலத்தில், வாயைக் கொடுத்து, வம்பை விலைக்கு வாங்குகிறாரே' என, எரிச்சலுடன் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X