சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஓரங்கட்டப்படும் எம்.எல்.ஏ., புலம்பல்!

Added : டிச 28, 2020
Share
Advertisement
ஓரங்கட்டப்படும் எம்.எல்.ஏ., புலம்பல்!நாயர் தந்த இஞ்சி டீயை பருகியபடியே, ''சீட்டுக்காக, தொழிலதிபர்களை சுத்திட்டு இருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''அ.தி.மு.க.,வுல, கொங்கு மண்டல அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி தான், முதல்வருக்கு நெருக்கமா இருக்காவ... இவங்களுக்கு,

டீ கடை பெஞ்ச்


ஓரங்கட்டப்படும் எம்.எல்.ஏ., புலம்பல்!



நாயர் தந்த இஞ்சி டீயை பருகியபடியே, ''சீட்டுக்காக, தொழிலதிபர்களை சுத்திட்டு இருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி
அண்ணாச்சி.
''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க.,வுல, கொங்கு மண்டல அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி தான், முதல்வருக்கு நெருக்கமா இருக்காவ... இவங்களுக்கு, இந்தப் பகுதியில இருக்கிற நிறைய தொழிலதிபர்கள் பழக்கமா
இருக்காவ வே...

''இதனால, ஆளுங்கட்சியில, 'சீட்' கேட்க விரும்புறவங்க, தமிழகம் முழுக்க இருந்து, கொங்கு மண்டலத்துக்கு வந்து, இந்த தொழிலதிபர்களை பார்த்து, நச்சரிச்சிட்டு இருக்காவ... கட்சியினர் தொல்லை தாங்க முடியாம, பலர் தங்களது மொபைல் போன் நம்பர்களையே மாத்திட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கட்சியில முக்கியத்துவம் தரலைன்னா, ஆளுங்கட்சிக்கே போயிடலாம்னு நினைக்கிறாரு பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார், அன்வர்பாய்.

''யார் ஓய் அது...'' என்றார், குப்பண்ணா.

''வேளாண் சட்டங்களுக்கு எதிரா, நாடு முழுக்க, 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி, ராகுல் தலைமையில எம்.பி.,க்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் பேரணியா போய், ஜனாதிபதியிடம் கொடுத்தாங்கல்ல... இதுல, தமிழகத்துல இருந்து மூத்த எம்.பி., ஒருத்தர் மட்டும் டில்லி போகலை பா...

''அன்னைக்கு, எம்.ஜி.ஆர்., நினைவு நாளுங்கிறதால, அங்க அஞ்சலி செலுத்த போயிட்டாரு... அதுவும் இல்லாம, தனக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டுட்டு இருக்காரு... இவருக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், அவரது வாரிசும் ஆதரவு தந்திருக்காங்க பா...

''ஒருவேளை தனக்கு பதவி தரலைன்னா, தன் ஆதரவாளர்களோட, அ.தி.மு.க.,வுக்கு போக ரகசிய பேச்சு நடத்திட்டு இருக்கார்னு சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''ஆண்டியா இருந்தாலும், அரசரா இருந்தாலும் காங்கிரசுல ராகுல் குடும்பத்துக்கு பிறகு தானேங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''தன்னை ஓரங்கட்டுறதா, தலைமைக்கு புகார் பண்ண முடிவு பண்ணிட்டாருங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.

''யாருவே அது...'' என்றார், அண்ணாச்சி.

''மதுரை, திருப்பரங்குன்றம் தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன்... கட்சியில, மருத்துவரணி மாநில துணை தலைவராகவும் இருக்காருங்க...

''வர்ற தேர்தல்ல, மதுரை வடக்கு தொகுதியில போட்டியிட சீட் கேட்டு, தலைமைக்கும் தெரியப்படுத்தியிருக்கார்... ஆனா, அங்க இருக்கிற கட்சி நிர்வாகிகள் இதை விரும்பலையாம்...

''இதனால, எம்.எல்.ஏ., நடத்துற நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு தராததால, மற்ற கட்சியினரும் போகக் கூடாதுன்னு முட்டுக்கட்டை போடுறாங்க... இதனால, விரக்தியில இருக்கிற சரவணன், கட்சி தலைமையிடம் முறையிட போறதா புலம்பிட்டு இருக்காருங்க...''
என்றார், அந்தோணிசாமி.அரட்டை முடிய, நண்பர்கள் கலைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X