'கேரளா மாடல்': தமிழகத் தேர்தலிலும் பாயுமா புது ரத்தம்?

Updated : டிச 30, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
திருவனந்தபுரம் :கேரளாவில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வென்ற, 21 வயது ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றார். இவரைப்போல், பல இளைஞர்கள், இளம் பெண்கள், இந்தத் தேர்தலில் வென்றுள்ளனர். இதையடுத்து, அரசியல் களத்தில் இளைஞர்களை களமிறக்கும் 'கேரளா மாடல்' குறித்து பரவலாக பேசப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும், இளம்
இளைஞர்கள், அரசியல் பதவிகள், கேரளா மாடல்,  தமிழகத் தேர்தல், புது ரத்தம்

திருவனந்தபுரம் :கேரளாவில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வென்ற, 21 வயது ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றார். இவரைப்போல், பல இளைஞர்கள், இளம் பெண்கள், இந்தத் தேர்தலில் வென்றுள்ளனர். இதையடுத்து, அரசியல் களத்தில் இளைஞர்களை களமிறக்கும் 'கேரளா மாடல்' குறித்து பரவலாக பேசப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும், இளம் ரத்தம் பாயுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இந்தக் கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த, 21 வயது மாணவி, ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மேயராக , நேற்று பதவியேற்றார். இதன் வாயிலாக, நாட்டிலேயே, முக்கியத்துவம் வாய்ந்த பெருநகரங்களில், மிகவும் குறைந்த வயதில், மேயராகும் பெருமையை, அவர் பெற்றுள்ளார். இவரைத் தவிர, இடது ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த, 20 வயதுகளில் உள்ள பலரும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மரியம் ராய், 21, பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அருவப்புலம் பஞ்சாயத்தின் தலைவராக பதவியேற்க உள்ளார். மாநிலத்தின் இளம் பஞ்சாயத்து தலைவர் என்ற பெருமையை, அவர் பெறுகிறார்.


வெளிப்படைஓலவண்ணா கிராம பஞ்சாயத்து தலைவராக பதவியேற்க உள்ள, சாருதி, 22, பட்டப் படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவி. இவரைப் போல பலர், பதவியேற்றாலும், படிப்பைத் தொடருவோம் என கூறியுள்ளனர்.இதுபோன்ற இளம், மாணவ - மாணவியர் மட்டுமல்லாமல், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பலரும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வென்றுள்ளனர். இது தற்போது, 'கேரளா மாடல்' என, அழைக்கப்படுகிறது.இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

'மாநிலத்தில் அரசுக்கு எதிரான மனநிலை இருக்கும் நிலையில், வெற்றி பெறாததற்கு, கட்சியின் மாநிலத் தலைமையே காரணம்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். மாநிலத்தின் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.வரும், ஏப்., - மே மாதங்களில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன், சட்டசபை தேர்தலை, கேரளா சந்திக்க உள்ளது. இதையடுத்து, கட்சியில் உள்ள பிரச்னை குறித்து ஆராய, காங்கிரஸ் பொதுச் செயலரும், கேரள பொறுப்பாளருமான, தாரிக் அன்வர் தலைமையிலான குழு, கேரளாவுக்கு வந்துள்ளது. இந்தக் குழுவில், கட்சியின் தேசிய செயலர்கள் இவான் டிசோசா, பி.வி. மோகன் இடம்பெற்றிருந்தனர்.


ஆலோசனைகூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசிய இவர்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, கட்சியின், கேரள மாநில நிர்வாகிகளில் பெரும்பாலானோர், 'இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர். கட்சிப் பதவியிலும், தேர்தலிலும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் தந்து, 'கேரள மாடலை' நாடெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.வழக்கம்போல், கோஷ்டி மோதல், பரஸ்பரம் புகார் என, தோல்விக்கு இந்தத் தலைவர்கள் காரணம் கூறினாலும், இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த இளைஞர் மாடல், சட்டசபை தேர்தலிலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், கேரள மாடல் நடைமுறைக்கு வருமா என்ற ஏக்கமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-டிச-202023:05:35 IST Report Abuse
ஆரூர் ரங் கம்யூகள் முழு.மனதுடன் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. கம்யூ வின் .மூத்த பெண்😥 தலைவியர்கள் பாஜக வேட்பாளர்களிடம் படு தோல்வியடைந்துவிட்டதால் வேறு வழியின்றி ஆர்யாவை தேர்ந்தெடுத்துள்ளனர் . இப்போ😇 அங்கு முக்கிய எதிர்கட்சி பாஜக தானாம்.
Rate this:
Cancel
Nellai Ravi - Nellai,இந்தியா
29-டிச-202019:24:56 IST Report Abuse
Nellai Ravi முதலில் ஊழல் குற்றச்சாட்டில் இருக்கும் வயதை விஜயனை மாற்றி, ஒரு இளம் ரத்தம் புகுத்தவும்.
Rate this:
Cancel
29-டிச-202016:25:11 IST Report Abuse
Ram Pollachi குருவி தலையில் பனைங்காய்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X