ஹாங்காங்கில் உள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் தற்போது சீன கம்யூனிச அரசின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு சீனா ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை வகுத்தது. இதன்படி சீனாவால் பகுதியாக கட்டுப்படுத்தப்படும் ஹாங்காங்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி முழுவதுமாக ஆக்கிரமிக்க சீனா முயற்சி மேற்கொண்டது.

இதனை அடுத்து ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டம் வெடித்தது. பிடிவாரன்ட் இல்லாமல் பொது இடங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் சீன போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடும் 12 ஜனநாயகவாதிகள் சீனா கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிறையில் அடைத்தது.
சீனாவின் இந்த மனித உரிமை அத்துமீறலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. கைதாகிய 10 குற்றவாளிகள் சட்டவிரோதமாக ஹாங்காங் கடல் எல்லையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது சீன கப்பல் படை அவர்களை கைது செய்தது. இவர்களை விடுவிக்க தற்போது அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று சீனா வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
தப்பிச்செல்ல முயற்சித்த குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அடக்குமுறை பிடிக்காமல் தப்பிச் செல்ல முற்படும் ஜனநாயகவாதிகளுக்கு குற்றவாளிகள் என்று சீனா பெயர் சூட்டி உள்ளது என ஹாங்காங் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்தது.

தற்போது கைது செய்யப்பட்ட ஜனநாயகவாதிகளது உறவினர்கள் ஷென்சென் நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர். சீனாவின் அராஜகத்துக்கு எதிராக அவர்கள் சட்டரீதியாக போராடி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை சீனா திட்டமிட்டு தள்ளிவைத்து வருகிறது. இதற்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
1997-ஆம் ஆண்டுமுதல் பிரிட்டனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஹாங்காங், சுதந்திரமான வர்த்தகத்தை மேற்கொண்டது. 23 ஆண்டுகள் கழித்து தற்போது ஹாங்காங்கில் வசிக்கும் குடிமக்கள் சீனாவின் அடக்குமுறைக்கு ஆளாகி உள்ளனர். உலக நாடுகள் பல, இதனை கண்டும் காணாமல் உள்ளது தவறு என்றும் ஐநா இதில் தலையிட்டு அந்த 12 பேரின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE