அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு 'டோக்கன்' : ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : டிச 30, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை :'பொங்கல் பரிசு டோக்கனை, அ.தி.மு.க.,வினர் வழங்காமல், ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகம் முழுதும் பல இடங்களில், அ.தி.மு.க.,வினர் வாயிலாக, பொங்கல் பரிசு, 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான, 'டோக்கன்' வழங்கப்படுகிறது. அது, மக்களின் வரிப்பணம்; மக்களுக்கு திரும்பப் போவதை, தி.மு.க., மனமார வரவேற்கிறது.
 பொங்கல் பரிசு, டோக்கன், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின்

:  ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை :'பொங்கல் பரிசு டோக்கனை, அ.தி.மு.க.,வினர் வழங்காமல், ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகம் முழுதும் பல இடங்களில், அ.தி.மு.க.,வினர் வாயிலாக, பொங்கல் பரிசு, 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான, 'டோக்கன்' வழங்கப்படுகிறது. அது, மக்களின் வரிப்பணம்; மக்களுக்கு திரும்பப் போவதை, தி.மு.க., மனமார வரவேற்கிறது. ஆனால், தேர்தலுக்காக, அரசின் பொங்கல் பரிசை, அ.தி.மு.க.,வினர் வாயிலாக வழங்கச் சொல்வது ஏன்; அரசு கஜனாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை, அ.தி.மு.க.,வினர் ஏன் கையாள வேண்டும்; பொங்கல் பரிசு முறையாக போய் சேருவதில் குளறுபடிகளை ஏற்படுத்தும்.

அதில், அ.தி.மு.க.,வினர் குளிர் காயட்டும் என்பதற்காக, தெரிந்தே திட்டமிட்டே, இப்படி டோக்கன் கொடுக்கும் பொறுப்பு, அ.தி.மு.க.,வினரிடம் அளிக்கப்படுகிறதா என்பதை, முதல்வர் விளக்க வேண்டும். அ.தி.மு.க.,வினரால் பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை, முதல்வர் இ.பி.எஸ்., உடனே நிறுத்த வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக வழங்க வேண்டும்.
இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


அரசின் பட்டா மேளா: ஸ்டாலின் கண்டனம்


'தேர்தல் அவசரத்தில், பட்டா மேளாவை அரசு நடத்துவது,போலி பயனாளிகளுக்கு வழிவகுக்கும்' என,தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், இலவச பட்டா வழங்கும் அற்புத திட்டம் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியின், 10 ஆண்டு காலத்தில், அத்திட்டம் முடக்கி வைக்கப்பட்டது.
தேர்தல் அவசரத்தில், பட்ட வழங்கும் மேளா நடத்த வேண்டும் என, கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல, தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில், இது மாதிரி ஒரு கண்துடைப்பு மேளாவை நடத்த திட்டமிட்டுள்ளார்.

உண்மையான ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை கிடைக்கப் போகிறதா...; இல்லை. லஞ்ச லாவண்யம் கோரத் தாண்டவம் ஆடும் நிலையில், பட்டா அவர்களுக்கு கிடைக்குமா...?
முறையான கணக்கெடுப்பு நடத்தவில்லை. அ.தி.மு.க.,வினர் சில, பல காரணங்களுக்காக கைகாட்டும் நபர்களுக்கு மட்டும் இலவச பட்டா பட்டியல் தயராகிறது.பெயருக்கு தான் இலவச பட்டா. ஆனால், ஒவ்வொரு தாசில்தாரையும் அதி.மு.க.,வினர் மிரட்டி கிராம அளவில், 10 ஆயிரம் ரூபாய்; 20 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து, பயனாளிகளை தேர்வு செய்கின்றனர்.

மாவட்ட நிலப்பதிவேடுகள் இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. எனவே, அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் யார் என்பது பற்றிய தகவலும், அரசிடம் முழுமையாக இல்லை. இது, போலி பயனாளிகளுக்கு வழிவகுக்கும். உண்மையான பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் வெளிப்படை தன்மையுடன் நடத்த, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
29-டிச-202022:14:49 IST Report Abuse
bal எப்பதான் இந்த தமிழ் மக்கள் இலவசம், குவாட்டர், பிரியாணி மற்றும் துட்டுக்கு பின்னல் போக மாட்டார்கள்...வோட்டு போடுவதே இதற்காகத்தான்...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
29-டிச-202022:14:06 IST Report Abuse
bal இப்ப வேற கைரேகை தேவையில்லைனு சொல்லிட்டாங்க...எவன் வேணும்னா வாங்கலாம்...இல்லை கழக தொண்டர்கள் தெரு முனையில் நின்றுகொண்டு பிடுங்கிவிடும்...
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - கழக பாசறை தொண்டன் ,இந்தியா
29-டிச-202019:09:53 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு கொடுப்பது அரசு பணம் அதுவும் 5000 கோடி கடன் வாங்கி கொடுக்கிறான் , அப்போ அவன் ஏன் அதை நேரே வங்கி மூலம் கொடுத்து இருக்கலாமே மோடியை போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X