பொது செய்தி

தமிழ்நாடு

அறை உடைப்பு: இளையராஜா வேதனை

Updated : டிச 30, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை : பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லவிருந்த இசையமைப்பாளர் இளையராஜா, கடைசி நிமிடத்தில், அங்கு செல்வதை தவிர்த்தார்.சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, 'பிரசாத் ஸ்டுடியோ'வில், இளையராஜாவுக்கு ஒரு அறை இருந்தது. அந்த அறையில் தான், அவர் தன் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். அந்த அறையை காலி செய்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அதுதொடர்பான வழக்கில், நீதிமன்றம் அனுமதி
அறை உடைப்பு, இளையராஜா, வேதனை,பிரசாத் ஸ்டுடியோ

சென்னை : பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லவிருந்த இசையமைப்பாளர் இளையராஜா, கடைசி நிமிடத்தில், அங்கு செல்வதை தவிர்த்தார்.

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, 'பிரசாத் ஸ்டுடியோ'வில், இளையராஜாவுக்கு ஒரு அறை இருந்தது. அந்த அறையில் தான், அவர் தன் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். அந்த அறையை காலி செய்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அதுதொடர்பான வழக்கில், நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்று ஒரு நாள் மட்டும் அங்கு செல்ல, இளையராஜா திட்டமிட்டிருந்தார். இளையராஜா வருவதை அறிந்த பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் பலரும், ஸ்டுடியோ முன் குவிந்தனர். ஆனால், அவர் வரவில்லை.

இதுகுறித்து, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது:இளையராஜா இருந்த அறையே இல்லை. அறையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. அந்த அறை பூட்டின் சாவி, இளையராஜாவிடம் தான் உள்ளது. அந்த அறை தகர்க்கப்பட்டு, அங்கு இருந்த பொருட்கள், வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அந்தப் பொருட்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, இளையராஜாவிடம் கூறினோம். அவர் மிகவும் மனம் உடைந்து விட்டார். அவரது அறையை பார்க்க வேண்டும்; பொருட்களை பார்க்க வேண்டும் என்ற முனைப்பில் தான், அவர் அங்கு வருவதாக சொன்னார்.

'அந்த அறையே இல்லையென்றால், அங்கு வந்து என்ன செய்வது; என்னுடைய மன வேதனை இன்னும் அதிகமாகும். என்னால் தாங்கிக் கொள்ள முடியாது' என, இளையராஜா கூறி விட்டார். அடுத்துகட்ட நடவடிக்கை குறித்து, பேசி முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
05-ஜன-202111:08:51 IST Report Abuse
vbs manian இது என்ன அழிச்சாட்டிய ம் .இன்னொருவர் சொத்தை உரிமை கொண்டாடுவது. எவருக்கும் தங்கள் வீட்டை இடித்து திருத்தி அமைத்துக்கொள்ள உரிமை உண்டு. இவ்வகையான மொண்டித்தனத்தால் பெற்ற பெருமைகளையெல்லாம் இழக்கிறார்.
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
04-ஜன-202108:10:13 IST Report Abuse
nizamudin மசூதிகள் சர்ச்சுகள் கோயில்கள் தரம் தாழ்ந்த மனிதர்களால் உடைந்து போகும் காலம் இது அரசியல் வளர்ச்சிக்கு இது உதவுகிறது
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
31-டிச-202016:32:20 IST Report Abuse
ponssasi . நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததிற்காக ஒருநாள் நீதிமன்ற காவல் வைத்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் தமிழகத்தில் சில உதிரி கட்சிகள் நிலை மிக மோசமாக இருந்திருக்கும். நல்லவேளை சர்ச்சைக்குரிய இடம் இளையராஜாவுக்கு சொந்தம் என்று சொல்லாமல் விட்டார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X