விவசாயிகள் போராட்டத்துக்கு விரைவில் தீர்வு

Updated : டிச 30, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: விவசாய சங்கங்களுடன் ஆறாம் கட்ட பேச்சு நாளை நடக்கவுள்ள நிலையில் “புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்” என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைப் பகுதியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச்
விவசாய போராட்டம், விரைவில் தீர்வு, மத்திய வேளாண் அமைச்சர், நம்பிக்கை

புதுடில்லி: விவசாய சங்கங்களுடன் ஆறாம் கட்ட பேச்சு நாளை நடக்கவுள்ள நிலையில் “புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்” என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைப் பகுதியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. விவசாய சங்கங்களுடன் இதுவரை நடந்த ஐந்து கட்ட பேச்சும் தோல்வியில் முடிந்தன.
ஆறாம் கட்ட பேச்சு நாளை நடக்க உள்ளது. டில்லியில் உள்ள 'விக்யான் பவன்' மையத்தில் நடக்கவுள்ள இந்த பேச்சில் பங்கேற்க 40 விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதில் எம்.எஸ்.பி. எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. விவசாயிகளின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இதயங்களில் பொய்களால் கட்டமைக்கப்பட்ட சுவர் விரைவில் தகர்த்தெறியப்படும். உண்மையை அனைவரும் உணரவேண்டிய நேரம் விரைவில் வரும்.

இந்த புதிய சட்டங்களின் பலன்கள் விவசாயிகளிடம் சென்றடையத் துவங்கி உள்ளன. பல விவசாயிகள் இந்த சட்டங்கள் குறித்து நேர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில விவசாயிகளுக்கு மட்டுமே இந்த சட்டங்களில் குழப்பம் நீடிக்கிறது. அவர்களுக்கும் தெளிவாக எடுத்துரைத்து புரியவைப்போம். இந்த புதிய வேளாண் சட்டங்கள் ஏழை சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பலனிக்கும் என முழுமையாக நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
29-டிச-202022:06:40 IST Report Abuse
bal மூணு வேலை நல்ல சோறு கிடைக்கிறது...போராட்டத்தில்...பின்னர் என்ன...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
29-டிச-202022:06:09 IST Report Abuse
bal முதலில் இந்த கூட்டத்தில் எதனை பேர் விவசாயிகள்...ஏன் பஞ்சாப் மட்டும் போராட்டம் செய்கிறது...அங்குதான் நிறைய மந்திகள் மற்றும் ப்ரோக்கர்கள் உள்ளனர்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
29-டிச-202021:46:13 IST Report Abuse
konanki பஜனை செய்வது சமூக தவறு அல்ல. குண்டு வைப்பது ராணுவத்தினர் மேல் கல் எறிவது ஹவாலா தொழில் செய்வது உடல் பாகங்களில் தங்கம் கடத்துவது அயல் நாடுகளில் இருந்து சமுதாய சேவை என்று பணம் வாங்கி அந்த பணத்தைகொண்டுமத மாற்றத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் தான் சமூக விரோத செயல்கள். இந்த சமூக விரோதிகளை பாஜக அரசு களை எடுக்கிறது என்பதால் தான் இந்த அரசு நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X