சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு, விவசாயிகள் படையெடுப்பதால், வேளாண் துறையினர் தவித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழையால், அக்டோபர் முதல், தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இம்மாதம், 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், மாநிலம் முழுதும், 7 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், நெல் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. நிவர் புயல் பாதிப்பு குறித்து, மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். புரெவி புயல் ஆய்வுக்கு பின், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக அரசு கூறி வருகிறது. மொத்தமாக, 30 சதவீதத்திற்கு மேல் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் பாதித்து, 20 நாட்களுக்கு மேலாகியும், இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, நிவாரணத்தை கேட்டு, வேளாண் துறை இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில், போராட்டங்களிலும் விவசாயிகள் இறங்கியுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கு பதில் அளிக்க முடியாமல், வேளாண் துறையினர் தவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE