அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு துறை லஞ்ச பட்டியல் திருச்சியில் கமல் வெளியீடு

Added : டிச 28, 2020
Share
Advertisement
திருச்சி : ''இரட்டை இலை சின்னத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரே கூட்டம், இப்போது ஆட்சி செய்பவர்கள் தான்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திருச்சியில் நேற்று பேட்டியளித்தார். அப்போது, ''அரசு துறைகள் ஒவ்வொன்றிலும், விலை நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். இப்போது, வெளியிட்டிருப்பது லஞ்சப் பட்டியல்

திருச்சி : ''இரட்டை இலை சின்னத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரே கூட்டம், இப்போது ஆட்சி செய்பவர்கள் தான்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திருச்சியில் நேற்று பேட்டியளித்தார். அப்போது, ''அரசு துறைகள் ஒவ்வொன்றிலும், விலை நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். இப்போது, வெளியிட்டிருப்பது லஞ்சப் பட்டியல் தான். ஊழல் பட்டியலும் உள்ளது,'' எனக் கூறி, ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில், அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு உட்பட, 18 விதமான பொது சேவைகளுக்கு, மக்களிடம் வசூலிக்கும் தொகைகளை வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு இருந்தனர்.

பின், கமல் கூறியதாவது:தமிழகம் முழுதும் நடைமுறையில் இருக்கும் லஞ்சத்துக்கான, 'ரேட் கார்டு' தயாரிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கு ஒரு விலை, பெண்ணுக்கு ஒரு விலை என நிர்ணயித்து, தொட்டில் முதல் சுடுகாடு வரை, லஞ்சத்துடன் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான கார்டு தான் இது.ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை வைத்து, ஊழல் செய்வதை, இல்லாமல் செய்வதற்கு, 'சிம்பிள்' வழி இருக்கிறது. மக்கள் நீதி மையத்தின் ஆட்சியில், தலைமைச் செயலகமே பேப்பர் இல்லாமல் இயங்க வேண்டும் என்பது தான் நோக்கம். அரசுக்கும், மக்களுக்குமான தொடர்பை வலுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும், இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் இருக்கும். தேர்தல் கூட்டணி பற்றி, ஜனவரி மாதத்தில் கூறுவதாகத் தான் சொல்லியிருந்தேன்.

மூன்றாவது அணிக்கு முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்றால், கூட்டணி அமைத்து, அந்தக் கட்சியினருடன் பேசி முடிவு செய்ய வேண்டும். பா.ஜ., அரசியலில் மதவாதம் இல்லை என்று சொல்ல முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, தஞ்சாவூர் அண்ணா நகரில் பிரசாரம் செய்து கமல் பேசியதாவது: எம்.ஜி.ஆரை, நான் கையில் எடுக்கவில்லை. அவர் தான், என்னை கையில் எடுத்து, தோளில் சுமந்தார். இதை பற்றி பேசுபவர்கள், சரித்திரங்களையும், நிகழ்வுகளையும் பார்ப்பது கிடையாது. 'எலெக் ஷன்' நேரத்தில் மட்டுமே பேசுபவர்கள், பின், 'கலெக் ஷனுக்கு' சென்று விடுவர்.

என்னுடன் அரசியலுக்கு வந்துள்ள அனைவரும், தனக்கென்று ஒரு தொழில் உள்ளவர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து, சம்பாதிக்க மாட்டார்கள். உங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை பெற்று தருவர். நீங்களும் கைகோர்த்தால், இந்தத் தேரை இழுத்து விடலாம். சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சை, திறந்தவெளி சாக்கடை ஓடும் நகராக உள்ளது. அதை மாற்றியாக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X