பொது செய்தி

தமிழ்நாடு

11 கோடி குடும்பங்கள் சந்திக்க பரிஷத் திட்டம்

Added : டிச 28, 2020
Share
Advertisement
கோவை : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, நான்கு லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களைச் சந்திக்க, விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: உ.பி., மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் அமையும் கோவில், கோடிக்கணக்கான மக்களின் பக்தியின்

கோவை : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, நான்கு லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களைச் சந்திக்க, விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: உ.பி., மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் அமையும் கோவில், கோடிக்கணக்கான மக்களின் பக்தியின் அடையாளமாக விளங்குவதோடு, ஹிந்துக்களின் பெருமையாகவும் விளங்குகிறது. மேலும், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், ஐந்து கோபுரங்கள் மற்றும் மூன்று தளங்களுடன், ராமர் கோவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருகனர் சிலைகள் அமைக்கப்படும். கோவில் கட்டுமானப் பணியில் நாடு முழுக்க உள்ள பக்தர்கள், தங்களின் பங்களிப்பை அளிக்கும் வகையில், அவர்களை தொடர்பு கொள்ள உதவுமாறு, 'ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா' அறக்கட்டளை, விஷ்வ ஹிந்து பரிஷத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, ஜன., 15 மகர சங்கராந்தி முதல், மாசி பவுர்ணமி நாளான, பிப்., 27 வரை, மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடக்கிறது. கோவில் கட்டும் பணியில், பக்தர்கள் எவ்வாறு பங்கேற்க முடியும் என்பதை விளக்குவதுடன், அவர்களிடம் இருந்து நன்கொடைகளும் பெறப்படும்.அதன் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், 10, 100, 1,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் மற்றும் ரசீது புத்தகங்களை தன்னார்வலர்கள் வழங்குவர். இந்த திட்டத்தின் வாயிலாக, நான்கு லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களை தொடர்பு கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10 ஆயிரம் ஊராட்சிகளில், 50 லட்சம் குடும்பங்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 90 ஆயிரம் தொண்டர்கள், இப்பணியில் ஈடுபடுவர்.காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடாதிபதிகள், ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான நிதி சேகரிப்பு இயக்கத்தில் பங்கேற்று, கோவில் குறித்த தகவல்களை கொண்டு செல்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X