அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டுவிட்டர்' வழியாகவே ரஜினி கட்சி அறிவிப்பு?

Added : டிச 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : உடல் நலக்குறைவால் ஓய்வில் உள்ள நடிகர் ரஜினி, கட்சி அறிவிப்பை, 'டுவிட்டரில்' வெளியிடுவார் என, தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாதில், அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. படக்குழுவில், நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ரஜினியும் தன்னை பரிசோதித்தார். அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், ரத்த

சென்னை : உடல் நலக்குறைவால் ஓய்வில் உள்ள நடிகர் ரஜினி, கட்சி அறிவிப்பை, 'டுவிட்டரில்' வெளியிடுவார் என, தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாதில், அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. படக்குழுவில், நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ரஜினியும் தன்னை பரிசோதித்தார். அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, ஐதராபாதில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி, நேற்று முன்தினம் சிகிச்சை முடித்து சென்னை திரும்பினார்.ரஜினி தன் கட்சி குறித்து, 31ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார். கட்டாயம் ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால், 'கட்சி அறிவிப்பை, இருந்த இடத்தில் இருந்தே, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளம் வாயிலாக அறிவிப்பார்' என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து, நிர்வாகிகள் கூறியதாவது: ரஜினி எது பேசினாலும், எதை செய்தாலும், அது உலகளவில் டிரெண்டிங் ஆகிவிடும். கட்சி அறிவிப்பை ஏற்கனவே, அவர் திட்டமிட்டு விட்டார்.சொன்னபடி, நாளை மறுதினம், கட்சி குறித்த அறிவிப்பை, டுவிட்டர் உள்ளிட்ட, ஆன்லைன் தளம் வழியே வெளியிடுவார். அனைத்தையும் விட அவர், அவரது உடல் நலன் எங்களுக்கு முக்கியம். அதற்கேற்ப அவர் செயல்படுவார். நாங்கள் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-டிச-202012:21:08 IST Report Abuse
Bhaskaran சற்றுமுன் வந்த செய்த் படி ரஜனி கட்சி ஆரம்பிக்கவில்லை உடல் நிலையை காரணம் காட்டி பல்டி .ஸ்டாலினுக்கு ரொம்ப சந்தோசம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X