சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல கைகள் மாறிய குழந்தை மீட்பு

Added : டிச 28, 2020
Share
Advertisement
சேலம் : தந்தையால் விற்கப்பட்டு, அடுத்தடுத்து கைமாறிய பெண் குழந்தையை, கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்ட போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டம், நெத்திமேடு கரட்டைச் சேர்ந்தவர் விஜய், 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 25. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நவ., 1ல், சத்யாவுக்கு, மேச்சேரி அரசு மருத்துவமனையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.விஜய், அந்த குழந்தையை நவ.,

சேலம் : தந்தையால் விற்கப்பட்டு, அடுத்தடுத்து கைமாறிய பெண் குழந்தையை, கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்ட போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், நெத்திமேடு கரட்டைச் சேர்ந்தவர் விஜய், 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 25. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நவ., 1ல், சத்யாவுக்கு, மேச்சேரி அரசு மருத்துவமனையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.விஜய், அந்த குழந்தையை நவ., 15ல், 1.15 லட்சம் ரூபாய்க்கு, வீட்டின் அருகே உள்ள வெங்கடேசன் மனைவி கோமதி, 34, என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.குழந்தையை காணாமல் துடித்த சத்யா, அன்ன தானப்பட்டி போலீசில், நவ., 17ல் புகார் அளித்தார்.

கோமதியிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குழந்தை, ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த நிஷா, 40, என்பவரிடம் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது.அவரை பிடித்து விசாரித்தனர். பவானியைச் சேர்ந்த சித்ரா, 35, பாலாமணி, 38, ஆகியோர் மூலம், பெங்களூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 53 என்பவருக்கு, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்ற நிலையில், அவர் மரியகீதா, 47 என்பவருக்கு, 3 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.அவர், தர்மபுரி மாவட்டம், பொம்மிடியை சேர்ந்த சுந்தர்ராஜன் - சசிகலா தம்பதிக்கு, 4 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரிந்தது. அன்னதானப்பட்டி தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் குழந்தையை மீட்டனர்.

கடத்தல் விவகாரத்தில், ஏற்கனவே இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது மரியகீதா, ராஜேஸ்வரி, சுந்தர்ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டதால், கைது எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து உள்ளது.இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்ட பாலாமணி, சித்ரா, குழந்தை யின் தந்தை விஜய், ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.கடத்தல் கும்பலிடம் இருந்து, 58 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட குழந்தையை, தாய் சத்யாவிடம் தற்காலிகமாக போலீசார் ஒப்படைத்துள்ளனர். குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X