சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் விசாரணைக்கு தற்கொலை

Added : டிச 28, 2020
Share
Advertisement
மயிலாடுதுறை : கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டவர், தற்கொலை செய்து கொண்டதால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு நடுத்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி, 72; ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த, 22ம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த, 10 சவரன் நகையும் மாயமானது. மணல்மேடு போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு, 45

மயிலாடுதுறை : கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டவர், தற்கொலை செய்து கொண்டதால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு நடுத்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி, 72; ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த, 22ம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த, 10 சவரன் நகையும் மாயமானது. மணல்மேடு போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு, 45 என்பவரை அழைத்து விசாரித்தனர். இந்நிலையில், அய்யாவு விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, உயிரிழந்தார்.

ஆத்திரமடைந்த உறவினர்கள், மணல்மேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று சாலையின் குறுக்கே, முள்வேலி தடுப்பு அமைத்து மறியலில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., மகாராணி, டி.எஸ்.பி., அண்ணாதுரை பேச்சு நடத்தினர். 'அய்யாவு தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அய்யாவு குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.அரசுக்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. அய்யாவுவிற்கு மனைவி, மூன்று மகள்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X