சென்னை : ''கவர்னரிடம் நாங்கள் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் யாராவது மறுப்பு சொல்லி இருக்கின்றனரா; ஆதாரங்களுடன் மறுத்துள்ளனரா?'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட, தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' தேர்தல் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க., அரசின் மீது, பொய்யான ஊழல் புகார்களை சொல்லி, கவர்னரிடம் மனு கொடுத்துள்ளதாக, முதல்வர் சொல்லி இருக்கிறார்.பொத்தாம் பொதுவாக பொய் என, எப்படி சொல்ல முடியும்? ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் யாராவது மறுப்பு சொல்லி இருக்கின்றனரா; ஆதாரங்களுடன் மறுத்துள்ளனரா?'என் உறவினர்கள் டெண்டர் போட்டது எனக்கு தெரியாது' என, பதில் சொல்கிறார் முதல்வர்.
உறவினர்கள், பினாமிகள் பெயரால், கோடிக்கணக்கான மதிப்பு டெண்டர்கள் எடுக்கப் பட்டதற்கு, இதுவரை பதில் இல்லை. யோக்கியர் என்றால், எதற்காக உச்ச நீதிமன்றம் போனார் முதல்வர்?வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து, பன்னீர்செல்வத்தின் பதில் என்ன; பினாமி நிறுவனங்கள் வாயிலாக, டெண்டர்கள் எடுத்தது குறித்து, வேலுமணியின் பதில் என்ன?மக்களை ஏமாற்றாதீர்கள்; நிச்சயம் ஏமாந்து போவீர்கள். இந்த பாவம் சும்மா விடாது; பதவியைப் பறிக்கும்; உங்கள் அரசியலுக்கே முற்றுப்புள்ளி வைக்கும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE