பொது செய்தி

தமிழ்நாடு

சரிந்தது வெங்காயம் உருளை கிழங்கு விலை

Added : டிச 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : அறுவடை துவங்கியதன் எதிரொலியாக, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.மழையால், இந்த மாநிலங்களில் விளைச்சல் பாதித்ததால், சில மாதங்களுக்கு முன், கிலோ வெங்காயம், 100 ரூபாய்; உருளைக்கிழங்கு,

சென்னை : அறுவடை துவங்கியதன் எதிரொலியாக, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.மழையால், இந்த மாநிலங்களில் விளைச்சல் பாதித்ததால், சில மாதங்களுக்கு முன், கிலோ வெங்காயம், 100 ரூபாய்; உருளைக்கிழங்கு, கிலோ, 80 ரூபாய் வரை விற்பனையானது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெங்காயம் விலையை கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்தும், இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், விலை மேலும் அதிகரிக்கவில்லை.பல்வேறு மாநிலங்களில், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது துவங்கியுள்ளது.

அங்கிருந்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு, அவற்றின் வரத்து அதிகரித்துள்ளது.எனவே, வெங்காயம்மொத்த விலையில், கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரை; உருளைக்கிழங்கு, 20 முதல், 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயம், உருளைக்கிழங்கு விலை குறைந்து வருவதால், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
29-டிச-202010:18:52 IST Report Abuse
Loganathan Kuttuva விவசாய சரக்கு ரயில்களை வடக்கில் இருந்து தெற்கு பகுதிக்கு இயக்கி காய்கறி தானியங்களை இங்கு கொண்டு வந்தால் மக்கள் பயன் அடைவார்கள் .
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
29-டிச-202008:41:07 IST Report Abuse
R.RAMACHANDRAN விவசாயிகளிடம் இரண்டு டுபாய்க்குள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்றால் வியாபாரிகளும் அவர்களிடம் வாங்குவோரும் மகிழ்ச்சி அடையவே செய்வர்.உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் துன்பப படுவர்.எனவே வெங்காயம் தக்காளி போன்றவற்றிற்கு பத்து ரூபாய் என குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து அதற்கு கீழ் கொள்முதல் செய்து கொள்ளை லாபம் பார்ப்பவர்களை தண்டிக்க வழிவகை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X