பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதி, மதமும் வேண்டாம்; இட ஒதுக்கீடும் வேண்டாம்ங்க!: வாகர் தேர்தல் அறிக்கை -2

Added : டிச 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து அறிக்கை வெளியிட்டு, ஆட்சிக்கு வந்ததும், அவை எப்போதுமே, 'புஸ்வாணம்' ஆகி நாம் பார்த்திருக்கிறோம். மக்கள் தேவையை மனதில் வைத்து அவை தயாரிக்கப்படுகிறதா அல்லது அரசியல்வாதிகளின் 'தேவை'களை வைத்துத் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம், எல்லார் மனதிலும் எப்போதுமே எழும்; அவ்வளவு 'தரமான' நிர்வாகத்தை, திராவிட கட்சிகள் தந்து
 ஜாதி, மதமும் வேண்டாம்; இட ஒதுக்கீடும் வேண்டாம்ங்க!

அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து அறிக்கை வெளியிட்டு, ஆட்சிக்கு வந்ததும், அவை எப்போதுமே, 'புஸ்வாணம்' ஆகி நாம் பார்த்திருக்கிறோம். மக்கள் தேவையை மனதில் வைத்து அவை தயாரிக்கப்படுகிறதா அல்லது அரசியல்வாதிகளின் 'தேவை'களை வைத்துத் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம், எல்லார் மனதிலும் எப்போதுமே எழும்; அவ்வளவு 'தரமான' நிர்வாகத்தை, திராவிட கட்சிகள் தந்து வந்திருக்கின்றன.

எனவே, மக்களின் தேவையை அவர்களிடமே கேட்போமே என நினைத்து, நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்குள், ஆயிரக்கணக்கான தேர்தல் அறிக்கைகளை எழுதி, வாசகர்கள் குவித்து விட்டனர். பல கடிதங்கள், ஒத்த கருத்துடையவையாக இருந்ததால், அது போன்ற கடிதங்கள் தவிர, மற்ற அனைத்தும் இங்கே வெளியிடப்படுகின்றன. இ - மெயில், நேரடி கடிதம், டெலிகிராம் மூலம் குவிக்கப்பட்ட அறிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளன. - ஆசிரியர்.
மதமாற்றத்தை தடை செய்யணும்இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனர் அர்ஜுன் சம்பத்:

மசூதிகளை நிர்வாகம் செய்ய வக்பு வாரியமும், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களை நிர்வாகம் செய்ய கிறிஸ்தவ சபைகளும் உள்ளன. ஆனால் கோவில்களை மட்டும் அரசின் அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. கோவில் சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு சொந்தமான நகைகள், உற்சவ மூர்த்திகள், விக்ரகங்கள், அரிய கலைப்பொக்கிஷங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.கோவில் நிர்வாகம், திருவிழாக்கள், திருப்பணிகள், வழிபாடுகளில் அறநிலையத்துறை தலையிடுகிறது. இதனால் கோவில்களில் பாரம்பரிய முறைப்படி பூஜைகள், விழாக்கள் நடப்பதில்லை. கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதில்லை. விழாக்கள் நடத்துவதே துன்பமாக இருக்கிறது.
இதற்கு தீர்வாக, அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். கோவில்களை நிர்வாகம் செய்வதற்கு, அறவோர் வாரியம் ஏற்படுத்த வேண்டும். அறங்காவலர் குழுக்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்கள், உபயதாரரர்கள் உள்ளிட்ட வாக்காளர்களை கொண்டு மூன்றாண்டுக்கு ஒரு முறை அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
தேர்வாகும் அறங்காவலர் சபைகளுக்கு முழு அதிகாரம் தர வேண்டும். அரசு என்பது, தவறு நடந்தால் மட்டுமே தலையிட வேண்டும். இவ்வாறு நடப்பதற்கு, தனி தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்.

* குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து கோவிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்போது தான் முறைப்படி குத்தகை வசூல் ஆகும். கோவிலில் விளக்கு எரியும். கோவில் நகைகள், ஆபரணங்கள், அந்தந்த கோவில்களில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். கோவில் பாதுகாப்புக்காக அறநிலையத்துறை காவலர் பிரிவு, ஹிந்து திருக்கோவில் பாதுகாப்பு படை என்ற பெயரில் ஏற்படுத்த வேண்டும்.
* மோசடி செய்து மதமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். தாய் மதம் திரும்பும் சடங்கு செய்து, சான்றிதழ் வழங்க கோவில்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கை களை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில்வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தரிசன கட்டணம் கூடாது!கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயமாக்கப்பட வேண்டும். கல்வி, மருத்துவம், முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும். நதிகள் இணைப்பு நாடு முழுதும் செய்யப்பட வேண்டும். ஏரி, குளம், குட்டைகள் துார் எடுத்து, நீர் நிரப்பப்பட வேண்டும்.என்.சத்தியமூர்த்தி, பொள்ளாச்சி


*தகுதிக்கேற்ப அரசுப்பணி!வீட்டுக்கு ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்க வேண்டும். வீடில்லா அனைவருக்கும் இலவச வீடு, இலவச கல்வி வழங்க வேண்டும். அனைத்து முக்கிய நிறுவனங்களும் பொதுத்துறை ஆக்கப்பட வேண்டும். 60 வயதுக்கு மேல், அனைவருக்கும் இலவச பயண அனுமதி வழங்கப்பட வேண்டும்.கே.பி.சுரேஷ் குமார், மேலுார், மதுரை.


*கைத்தொழிலுக்கு உதவி!இல்லத்தரசிகள், வீட்டில் இருந்தபடியே, சிறு கைத்தொழில்கள் செய்து, தன்மானத்துடன் வாழ வழி செய்ய வேண்டும். அனைத்து தேவைகளுக்கும் கணவரை எதிர்பார்க்காமல், அவர்களுக்கும் ஒரு வருமானம் கிடைத்தால், சிறுக சேமித்து, குடும்பத்துக்கு உதவ முடியும்.புஷ்பா பழனிசாமி, நல்லுார், திருப்பூர்.


*நம்பிக்கை தரணும்!ஒவ்வொரு கட்சிக்கும் வட்டத்துக்கு நுாறு தொண்டர்கள் இருக்கின்றனர். ஆயிரம் பொதுப்பிரச்னை இருந்தாலும், அந்த தொண்டர்கள் சரி செய்ய முன் வருவதில்லை. வாக்குறுதி அளிப்பதற்கு முன், அரசியல் கட்சியினரும், அதன் தொண்டர்களும், 'நாங்கள் வந்தால் கட்டாயம் நல்லது செய்வோம்' என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலே போதும்.
சண்முகி.


*தரம் உயர்த்தணும்!அரசு மருத்துவக் கல்லுாரிகளை, தனியார் போல் தரம் உயர்த்த வேண்டும். நல்ல கட்டடம், இலவச புத்தகம், இலவச லேப்டாப், இலவச வைபை வழங்கப்பட வேண்டும். மதுரையில் விரைவில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்.கே.ரிட்ஸ் அய்யப்பன், திருப்பூர்.


*பழ மரங்கள் தான் தேவைபூரண மதுவிலக்கு அமல் செய்ய வேண்டும். மழை நீர் சேகரிப்பு, ஊக்குவிக்கப்பட வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அழித்து, அவற்றுக்கு பதிலாக வருவாய் ஈட்டும் வகையில் பழ மரங்களை நட வேண்டும். கோழி, ஆடு, வாத்து, மாடு வளர்ப்பு தொழிலை, குழுக்களாக செய்வதை ஊக்குவித்து வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.சு.பிரசாத், பரமக்குடி.


*ரேஷன் கடையை மூடணும்ரேஷன் கடைகள் தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. எனவே, ரேஷன் கடைகளை மூடி விட்டு, அதில் பொருட்கள் வாங்க தகுதியான குடும்பத்தினருக்கு, மாதம் தோறும், 5,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை வங்கி கணக்கில் செலுத்தி விடலாம்.டி.கே.ராமன் கண்ணன், தாம்பரம்.


*அனைவருக்கும் தடுப்பூசி!கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் வழங்குவதற்கு கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டும். இதில் தொண்டு நிறுவனத்தினரையும் இணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
நாகேந்திரன், புதுச்சேரி.


*உழவர் சந்தைக்கு புத்துயிர்பள்ளி மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், தனித்திறன் மேம்படுத்தும் பயிற்சி தர வேண்டும். மாணவியருக்கு தற்காப்புக்கலை பயிற்றுவிக்க வேண்டும். உழவர் சந்தைக்கு புத்துயிர் தர வேண்டும். அரசு பஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்து, நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். உபரி தொழிலாளர்களை, பிற அரசுப் பணிகளுக்கு மாற்ற வேண்டும். கா.ச.மருதநாயகம், சென்னை.


*பயிர்க்காப்பீட்டுக்கு தீர்வுகட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலர் கந்தசாமி:

விவசாயத்தை தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். இயற்கை பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படும்போது, பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடிவதில்லை. பிரிமீயம் கட்டி விட்டு, 'கிளெய்ம்' செய்ய முடியாத காப்பீடாக, பயிர்க்காப்பீடு திட்டம் இருக்கிறது. விவசாயியை கட்டாயப்படுத்தி பிரீமியம் வசூலிக்கும் அதிகாரிகள், பயிர் இழப்பு ஏற்பட்டால், காப்பீடு பலன் தர மறுக்கின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும்.
பால் உற்பத்தி செலவுக்கு தகுந்தபடி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வன விலங்குகள் பாதுகாப்புச்சட்டம், வனத்துக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஊருக்குள், பட்டா நிலத்துக்குள் வன விலங்குகள் புகும்போது, அந்த சட்டம் பிரயோகம் செய்யக்கூடாது. அந்த சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்யப்பட வேண்டும். காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் ஏராளம். அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், சுட்டுக்கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இந்திய தந்திச்சட்டம், பெட்ரோலியம் மினரல்ஸ் அண்ட் பைப்லைன் சட்டம் ஆகியவை சர்வாதிகாரத் தன்மையோடு இருக்கின்றன. அவற்றில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.


*பசுக்களை பாதுகாக்கணும்!பசு பாதுகாப்புக்கான அனைத்து முயற்சி களும் எடுக்கப்பட வேண்டும். நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் பசுக்கள், சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரிழக்கின்றன. அவற்றை காப்பதற்கு மீதமான காய்கறி கழிவுகளை வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தபட வேண்டும்.என்.ராதாகிருஷ்ணன், கடலுார்.


பணி நீக்கம் செய்யணும்தமிழக அரசு துறைகளில் லஞ்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை ஒழிக்க, ஆளும், ஆண்ட அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தெரிந்தே செய்யும் தவறுக்கு அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.கே.சக்திவேல், அவிநாசி.


'சிசிடிவி'யில் பார்க்கணும்!அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். அவர்கள் வேலை செய்வதை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் பணப்பரிமாற்றம் கூடாது. ஆன்லைன் முறை அமல் செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் தரப்படும் மனுக்களுக்கு 'டிராக்கிங்' எண் கொடுத்து, அதன் மீதான நடவடிக்கை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.எம்.வினோத் குமார், கடலுார்.


*ஆணவப் பேச்சு கூடாதுமக்களை மதிக்காத அரசு அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். லஞ்சம், அதிகாரிகளின் திமிர் பேச்சை ஒழித்தாலே போதும். அரசு துறையில் அரசியல் தலையீடு கூடாது. லஞ்சம் கேட்டால், செருப்பால் அடிக்கலாம் என்று அரசே போர்டு வைக்க வேண்டும்.பொன்னுசாமி, அவிநாசி.


*குறுகிய காலத்தில் தண்டனைகோவில்கள் அரசிடம் இருந்து விடுவிக்கப் பட்டு, பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்களில் லஞ்சம், முறைகேடுகள் பற்றி புகார் தெரிவிக்க உறுதியான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஊழல் பேர்வழிகளுக்கு, குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி, தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். மது விலக்கு அமல் செய்ய வேண்டும். அனைத்து அரசு டெண்டர்களும், 'இ-டெண்டர்' முறையில் நடத்தப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் மின்னணு முறையில் நிர்வாகம் செய்யப்பட வேண்டும்.பிரகாசம் வெங்கிடுசாமி, காளப்பட்டி, கோவை


*ஆள் பற்றாக்குறை போக்கணும்!வேளாண் சட்டம் மூன்றும் கட்டாயமாக வேண்டும். நுாறு நாள் வேலைத்திட்டத்தில் பாதி சம்பளத்தை அரசும், பாதி சம்பளத்தை விவசாயிகளும் தரும் வகையில் வழிமுறை ஏற் படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் விவசாயத் துக்கு ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
பி.ஆர்.மனோகரன், வைகலுார், அரவக்குறிச்சி


*நதிகள் இணைப்புநதிகளை இணைக்க வேண்டும். நதிநீர் சேமிக்க, குளங்கள், வாய்க்காலை உருவாக்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை போன்றவற்றை, வருவாயை பொறுத்து நிர்ணயிக்க வேண்டும். விவசாய நிலங்களை வீட்டு மனையாக கூறு போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சாதிய கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது.ஜெயக்குமார் ஜக்கையன், சிங்கப்பூர்.


*சமமான வருமானம்அடித்தட்டு மக்களின் வருமானம் உயர வேண்டும். செலவுகள் சமமானதாக இருப்பதைப் போல, வருமானம் என்பதும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.கே.எஸ்.கண்ணன், திருச்செங்கோடு, நாமக்கல்.


*தேவை வேலைவாய்ப்புபொறியியல் பட்டதாரிகள் பலர் வேலையின்றி சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு வேலையை உறுதி செய்யும் வகையில், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகிகளின் மூலம் விண்ணப்பம் பெற்று, தனியார் அல்லது அரசு வேலைகளில் லஞ்சம் பெறாமல் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
எஸ்.சசிகுமார், மைலேரிபாளையம், கோவை.


*நீராதார பாதுகாப்புரியஸ் எஸ்டேட் மாபியா கும்பல்கள் ஒடுக்கப்பட வேண்டும். நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, ஆங்கிலத்தில் நன்கு பேசும் வகையில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.எஸ்.சரவணன் சேகர், சென்னை.


*நஞ்சில்லா உணவு'நஞ்சு இல்லாத உணவு கொடுப்பேன்' என்று அரசியல்வாதிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும். இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
ஆ.ஆனந்தன், தேனி.


*வெளிப்படை வேண்டும்!ஒரு துறை சாலை அமைத்தால், மற்றொரு துறை குழி தோண்டுவது என்று இல்லாமல், அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அரசு திட்டங்களை மக்களுக்கும், மக்கள் குறைகளை அரசுக்கும் கொண்டு செல்லும் வகையில், சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.அசோக் குமார் கண்ணன், மதுரை.


*ஆபாச தளத்துக்கு தடை!சட்டசபையில் பெஞ்சு தட்டி நேரத்தையும், மக்கள் வரிப்பணத்தையும் வீணடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அமைச்சர்கள், எம்.பி., - - எம்.எல்.ஏ., மேயர், கவுன்சிலர்கள் யாரும், தனியார் கடை திறப்பு விழா, கோவில் விழாக்களில் பங்கேற்க கூடாது. அவர்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும். ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.எஸ்.ஆனந்த், திருப்பூர்.


*அரசே வசூலிக்கணும்!தனியார் பள்ளி கட்டணத்தை அரசே வசூலித்து, பின்னர் தனியாருக்கு செலுத்தினால் கட்டண கொள்ளை தவிர்க்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் விரும்பினால், ஹிந்தி மொழி படிக்க வழி செய்ய வேண்டும். மகளிர் குழுவினருக்கு, தனியார் நிதி நிறுவனங்கள் வட்டிக்கு கடன் தருவதை தடுத்து, கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும்.பொ.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி,


*மழை நீர் சேமிக்க மானியம்ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி நீர் சேமிக்க வேண்டும். மழை நீர் சேமிக்க, பழைய, புதிய வீடுகளுக்கு மானியம் தர வேண்டும். தென்னக ஆறுகள் இணைக்கப்பட வேண்டும். டோல் கேட்களில் வசூல் கொள்ளை ஒழிக்கப்படும். மது அரக்கனை ஒழிக்க வேண்டும். பாலியல், திருட்டு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.மோகன் வைத்தியலிங்கம் கோவூர், காஞ்சிபுரம்.


*இட ஒதுக்கீடு எதற்கு?மத வழிபாட்டுத்தலங்களுக்கு அரசு தலையீடு இல்லாத முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். புதிய இட ஒதுக்கீடு கூடாது. இப்போதுள்ள ஒதுக்கீடுகளுக்கு கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும். தண்ணீர் வீண் செய்வதை குற்றமாக்கி கடும் தண்டனை தர வேண்டும். குப்பை தரம் பிரித்தல் தீவிரமாக அமல் செய்யப்பட வேண்டும். தவறுவோருக்கு தண்டனை தரப்பட வேண்டும்.வி.ஆர்.ரங்கராஜன், சென்னை.


*கோவில் சொத்து மீட்புகோவில்களில் வரும் பல நுாறு கோடி ரூபாய் வருமானத்தை, அதிகாரிகளுக்கு கார் வாங்கவும், வாராந்திர கூட்டங்களுக்கு ஸ்வீட், காரம் வாங்கவும் பயன்படுத்துகின்றனர். முதலில் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை, அரசியல் தலைவர்கள் பிடியில் இருந்து மீட்க வேண்டும். கோவில் வருமானத்தை, கல்லுாரிகள், மருத்துவமனைகள் என்று மக்களுக்கு பயனுள்ள வகையில் செலவிட வேண்டும்.ஐ.ராகேஷ் குமார், ராமநாதபுரம்.


*இலவசம் கூடவே கூடாது!ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை மாவட்ட தலைவரும், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.,யுமான வேலு:


*மக்களுக்கு இலவசம் தருவதே ஊழலின்மறைமுக செயல்பாடு. மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை களை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக செய்தாலே, மக்கள் எல்லா நலமும் பெற்று பெருவாழ்வு வாழ்வர். அதை விடுத்து, ஏழை எளிய மக்களுக்கு இலவசம் கொடுப்பதே அவர்களே ஓட்டு வங்கி அரசியலாக்கும் முயற்சி. தங்களுக்கு ஓட்டுப் போட வைக்கும் முயற்சி தான்.இலவசம் என்பது இருக்கவே கூடாது. சட்ட விதிமுறைகள் அனைத்தையும் முறைப்படியாக செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பது எங்கள் கடமை என்று அரசியல் கட்சியினர் உறுதி மொழி கொடுக்க வேண்டும். அப்படி உறுதி மொழி கொடுத்து விட்டாலே, சமுதாயத்தில் சகல குறைபாடுகளும் நீங்கி விடும்.
இவ்வாறு வேலு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
29-டிச-202016:37:31 IST Report Abuse
Endrum Indian கேரளாவின் மலங்கரா சிரியன் தேவாலயம் ஆர்த்தோடக்ஸ், ஜாக்கோபைட் என இரு பிரிவுகளாக நிற்கின்றன. இந்த மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.????அப்போ இந்துக்களில் ஜாதி இருப்பது குறித்து ஏன்னா டப்பா விடுகின்றார்கள் இந்த கிறித்துவர்கள்???
Rate this:
Cancel
HARIHARAN - KANCHIPURAM,இந்தியா
29-டிச-202015:52:50 IST Report Abuse
HARIHARAN இடஒதுக்கீடு கல்விக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-டிச-202012:23:21 IST Report Abuse
Malick Raja நமது நாட்டை பொருத்தவரை அணைத்து பின்னடைவுகளுக்கும் காரணம் எரிபொருள் விலை வளர்ச்சி .. டாலரின் மதிப்பு வளர்ச்சியும் மட்டும் தான் இதை நன்கு அறிந்த அன்றைய ஒரு அறிவாளி சொன்னார் ஆளுமை அற்றவர்களால் நாட்டில் பெட்ரோல் விலை ரூ 67 க்கு விற்கிறது டாலர் 44 ரூ மதிப்பில் இருக்கிறது குருடாயிலோ 110 டாலரில் இருக்கிறது என்றார் அந்த அறிவாளி ஆட்சி அமைத்தும் இருக்கிறார் .. ஆனால் இன்று பெட்ரோல் விலை 87 ரூ ..கேஸ் 750 ரூ .டாலர் மதிப்பு ரூ 77 .விலை பற்றி கேட்டால் விலை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது மக்கள் நன்மை யடைகிறார்கள் என்றும் குருடாயில் விலை 40 டாலரில் இருப்பது மிகக்குறைந்த விலை .. நான் ஆட்சிக்கு வந்ததால் குருடாயில் விலை குறைந்து விட்டது அதன் பலனையும் மக்களே பெறுகிறார்கள் என்கிறார் ..காரணம் அவர் அறிவாளி அல்லவா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X