சென்னை : அறுவடை துவங்கியதன் எதிரொலியாக, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.மழையால், இந்த மாநிலங்களில் விளைச்சல் பாதித்ததால், சில மாதங்களுக்கு முன், கிலோ வெங்காயம், 100 ரூபாய்; உருளைக்கிழங்கு, கிலோ, 80 ரூபாய் வரை விற்பனையானது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெங்காயம் விலையை கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்தும், இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், விலை மேலும் அதிகரிக்கவில்லை.பல்வேறு மாநிலங்களில், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது துவங்கியுள்ளது.
அங்கிருந்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு, அவற்றின் வரத்து அதிகரித்துள்ளது.எனவே, வெங்காயம்மொத்த விலையில், கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரை; உருளைக்கிழங்கு, 20 முதல், 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயம், உருளைக்கிழங்கு விலை குறைந்து வருவதால், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE