பொது செய்தி

தமிழ்நாடு

டி.டி.சி.பி., வழிமுறைகளை மீறும் கலெக்டர்கள் ; கட்டுமானங்களுக்கு அனுமதி தருவதில் சிக்கல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
சென்னை : கட்டட அனுமதி கோப்புகளை ஆய்வு செய்வது தொடர்பாக, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., வகுத்துள்ள வழிமுறைகளை, மாவட்ட கலெக்டர்கள் மீறுவதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், பொது கட்டட விதிகள் அடிப்படையில், 10 ஆயிரம் சதுரடிவரையிலான கட்டுமானங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளும், அதற்கு மேலானவற்றுக்கு, டி.டி.சி.பி., கள அலுவலர்களும் அனுமதி வழங்கலாம்.இதற்கான

சென்னை : கட்டட அனுமதி கோப்புகளை ஆய்வு செய்வது தொடர்பாக, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., வகுத்துள்ள வழிமுறைகளை, மாவட்ட கலெக்டர்கள் மீறுவதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், பொது கட்டட விதிகள் அடிப்படையில், 10 ஆயிரம் சதுரடிவரையிலான கட்டுமானங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளும், அதற்கு மேலானவற்றுக்கு, டி.டி.சி.பி., கள அலுவலர்களும் அனுமதி வழங்கலாம்.இதற்கான கோப்புகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள், கலெக்டர்களிடம் முன் அனுமதி பெறுவது வழக்கம்.மாவட்டங்களில் நடக்கும் மாதாந்திர கூட்டத்தில், இதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.

இதனால், கட்டட அனுமதி வழங்கும் பணிகள் தாமதமாகின. இதற்கு தீர்வு காணும் வகையில், டி.டி.சி.பி., பிறப்பித்த உத்தரவு:சாதாரண குடியிருப்புகள்தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து, கள அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள் முடிவு எடுக்கலாம். கலெக்டர் தலைமையிலான மாதாந்திர கூட்டம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.இவ்வாறு எடுக்கப்பட்டமுடிவுகளை மட்டும், மாதாந்திர கூட்டங்களில், கலெக்டர்களுக்கு தெரிவித்தால் போதும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டது.இது குறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி. பாலமுருகன் கூறியதாவது:டி.டி.சி.பி., பிறப்பித்த இந்த உத்தரவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்ட கலெக்டர்கள் பின்பற்றுவதில்லை.

கட்டட அனுமதி கோப்புகள் தங்களிடம் வந்த பிறகு தான், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நிர்பந்திக்கின்றனர்.இதனால், துறை தலைமையின் உத்தரவுப்படி செயல்படுவதா, கலெக்டர் உத்தரவுப்படி செயல்படுவதா என்ற குழப்பம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழப்பங்களால், கட்டுமானங்களுக்கு அனுமதி கோரும் கோப்புகள் முடங்கியுள்ளன. தமிழக அரசு தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X