சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுங்கச்சாவடி குறித்து 'திடுக்' போலீசார் விசாரணை

Added : டிச 29, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பற்றி, சமூக வலைதளங்களில் பரவி வரும், 'வீடியோ' குறித்து, போலீசார் விசாரணை நடத்தினர். 'எச்சரிக்கை... விக்கிரவாண்டி டூ உளுந்துார்பேட்டை; இரவு பயணம் செய்பவரா நீங்கள்?' என்ற தலைப்பில், 'திகில்' வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டூ உளுந்துார்பேட்டை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பற்றி, சமூக வலைதளங்களில் பரவி வரும், 'வீடியோ' குறித்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

'எச்சரிக்கை... விக்கிரவாண்டி டூ உளுந்துார்பேட்டை; இரவு பயணம் செய்பவரா நீங்கள்?' என்ற தலைப்பில், 'திகில்' வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டூ உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், தனியாக செல்லும் புது கார், பெண்கள் அதிகம் பேர் செல்லும் காரை, பைக்கில் பின்தொடர்ந்து, இரும்பு ராடுகளால் சேதப்படுத்துகின்றனர். கார் ஓட்டுனர் இறங்கியதும், அவரை அடித்துப் போட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு, முதலில் 'ஆடியோ' வெளியிட்ட பெயர் கூறாத நபர், பின் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

தன் மாமா சமீபத்தில் சென்றபோது, இதுபோன்ற சம்பவம் நடந்தது. அவர் காரை நிறுத்தாமல் வேகமாக தப்பி வந்து விட்டார் என்றும் ஆடியோவில் கூறப்பட்டிருந்தது.இது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, விக்கிரவாண்டி டோல் பிளாசா குறித்து, அச்சத்தை ஏற்படுத்தியது. எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்டி போலீசார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இது தவறான தகவல்; இதுபோன்ற சம்பவம் எப்போதும் நடைபெறவில்லை என தெரிந்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும், விக்கிரவாண்டி அல்லது உளுந்துார்பேட்டை போலீசில் புகார் செய்யவில்லை. நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு போலீசார், 24 மணி நேரமும் பணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X