2 திருடர்கள் கைது 55 சவரன் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 திருடர்கள் கைது 55 சவரன் பறிமுதல்

Added : டிச 29, 2020
Share
வானுார் : ரோவில் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, 55 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த சின்ன பட்டானுாரில் அக்., 20ல், முருகையன் என்பவர் வீட்டில், 6 கிராம் நகை, ஆரோபுட், கணபதி நகர் பாலச்சந்திரன் வீட்டில், 3 சவரன் செயின், எறையானுார் அப்துல்அஜிஸ் வீட்டில், 9 சவரன் நகை திருட்டு போயின. இதேபோல, பல

வானுார் : ரோவில் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, 55 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.



விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த சின்ன பட்டானுாரில் அக்., 20ல், முருகையன் என்பவர் வீட்டில், 6 கிராம் நகை, ஆரோபுட், கணபதி நகர் பாலச்சந்திரன் வீட்டில், 3 சவரன் செயின், எறையானுார் அப்துல்அஜிஸ் வீட்டில், 9 சவரன் நகை திருட்டு போயின. இதேபோல, பல வீடுகளில் நகைகள் திருட்டு போயின. தனிப்படை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை செய்தனர். இதில் கிடைத்த தகவலின்படி, கர்நாடகா மாநிலம், மைசூரு, மாண்டியா, வேலுார் ஆகிய பகுதிகளில் திருட்டுகளில் ஈடுபட்ட ரவிகுமார், 47, கார்த்திக், 55, ஆகிய இருவரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.



இருவரும் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. திருடிய நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டாக வைத்திருந்ததை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X