பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அய்யாவின் கருணைக்கு ஏங்குகிறார்

Added : டிச 29, 2020
Share
Advertisement
கோவை:கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த, மூதாட்டி சாரதா கடந்த நான்கு ஆண்டுகளாக அலைந்தும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என, கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் நேற்றுமனு அளித்து சென்றார்.அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றியவர் கிருஷ்ணன் உண்ணி. ஓய்வூதியம் பெற்று வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், இவர் இறந்த நிலையில், குடும்ப ஓய்வூதியம் பெற முடியாமல்,

கோவை:கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த, மூதாட்டி சாரதா கடந்த நான்கு ஆண்டுகளாக அலைந்தும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என, கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் நேற்றுமனு அளித்து சென்றார்.அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றியவர் கிருஷ்ணன் உண்ணி. ஓய்வூதியம் பெற்று வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், இவர் இறந்த நிலையில், குடும்ப ஓய்வூதியம் பெற முடியாமல், இவரது மனைவி சாரதா அலைக்கழிப்புக்கு உள்ளாகியுள்ளார்.மூதாட்டி சாரதா கண்ணீருடன் கூறுகையில், ''எனக்கு, 83 வயசாகுது கண்ணு. என்னோட மகனும் உடம்புக்கு சரியில்லாம இருக்கான். வருமானமே இல்லை. என் வீட்டுக்காரர் இறந்த பிறகு, கவர்மென்டுல இருந்து எனக்கு வரவேண்டிய ஓய்வூதியம், நாலு வருஷமாகியும் கிடைக்கலை. கலெக்டர் ஆபீசுல, 15 தடவைக்கு மேல மனு குடுத்துட்டேன். எந்த வேலையும் நடக்கலை. நடக்க முடியலை. காதும் சரியா கேட்கறதில்லை. சரி, இந்த வாட்டியாவது கலெக்டரய்யாவை நேர்ல பார்த்து, மனு குடுக்கலாம்னு வந்தா, பெட்டியில போடச் சொல்லி அனுப்பிட்டாங்க. என்ன செய்றதுன்னு தெரியலை,'' என்று புலம்பினார்.நான்காண்டுகளாக ஒரு வயதான மூதாட்டியை அலைய விடும் அளவுக்கு, கலெக்டர் ஆபீசில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வேறு என்னதான் செய்கின்றனர்?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X