வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் சுகன்யாவிற்கு உடன் பணிபுரியும் போலீசார் வளைகாப்பு நடத்தினர்.
போலீஸ் என்றாலே பணிச்சுமையும், இறுக்கமான மனநிலையும் இயல்பாகவே வந்து விடும். அதிலும் பெண் போலீசார் படும் சிரமங்கள் சொல்லில் அடக்க முடியாதது. இந்த சூழலில் பெண் போலீசார் இணைந்து சக போலீசுக்கு வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடமதுரை அருகே பாகாநத்தத்தை சேர்ந்தவர் சுகன்யா. வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவருக்கு நேற்று ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் பெண் எஸ்.ஐ.,க்கள், ஏட்டு, போலீசார் வளைகாப்பு நடத்தினர்.
சுகன்யாவிற்கு மாலை அணிவித்து நலுங்கு வைத்து ஏழு வகை உணவு பரிமாறினர்.போலீசார் கூறுகையில், 'நாங்கள் ஒரே குடும்பத்தினரை போல் பணிபுரிகிறோம். குடும்ப விழா போல் ஸ்டேஷனில் வளைகாப்பு நடத்தினோம்',என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE