கோவை:கோவை ராமநாதபுரம் மணியம் சுப்ரமணி வீதியை சேர்ந்த, மாணிக்கவாசகத்தின் மகன் யுவராஜ், 27. பீளமேட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், பணிபுரிந்து வந்தார். தங்கையின் திருமணத்துக்காக, கோவை ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டில், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும் பகுதி நேரப்பணியிலும் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பங்கஜா மில்ரோடு அருகே, பைக் நிலை தடுமாறி ரோட்டில் இருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதியது. துாக்கி வீசப்பட்ட யுவராஜ் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE