கோவை:சுங்கசாவடிகளில் முறையற்ற வசூலை தடுக்க, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.மனுவில், 'உள்ளூர் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடந்த காலங்களில், சுங்கச்சாவடி பத்து கி.மீ.,க்குள் இருப்போருக்கு, மாதந்திர பாஸ் நாள் ஒன்றுக்கு, 5 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
தற்போது, வரும் 1ம் தேதி முதல் வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப, புதிய கட்டணம் செலுத்த அறிவிப்பு வந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பழைய முறையை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் வாகனங்கள், அடுத்த ஐந்து நிமிடத்தில், நீலம்பூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
அதே போன்று, திருச்சிரோடு அருகில் உள்ள சுங்கச்சாவடி, பொள்ளாச்சி ரோடு அருகிலுள்ள சுங்கச்சாவடி, மதுக்கரை வரை, 6 இடங்களில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சாலை, பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் இல்லாமலும், ஒப்பந்த காலக்கெடு முடிந்தும் வசூல் செய்யப்படுகிறது. இந்த வசூல் மையங்களை தடை செய்ய வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE