சென்னை : 'வெளிநாடுகளில் வேலையிழந்த தமிழருக்கு, பணி வாய்ப்பு வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து திரும்பிய தொழிலாளர்களில் பெரும்பான்மையினர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அந்தப் பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. அவற்றில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சுயதொழில் துவங்க விரும்புவோருக்கு, வங்கிகள் வாயிலாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வாயிலாகவும் கடன் பெற்றுத் தர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் ஏற்கனவே பணியாற்றி, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, மீண்டும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE