சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காயத்துடன் யானை அவதி 'கும்கி' உதவியுடன் சிகிச்சை

Added : டிச 29, 2020
Share
Advertisement
கூடலுார் : பொக்காபுரம் பகுதியில், முதுகில் பலத்த காயத்துடன் சிரமப்பட்டு வந்த காட்டு யானைக்கு, 'கும்கி' யானைகள் உதவியுடன், வனத் துறையினர் சிகிச்சை அளித்தனர். நீலகிரி மாவட்டம், சிங்காரா வனச் சரகம், பொக்காபுரம் வனப் பகுதியில், முதுகில் பலத்த காயத்துடன், ஆண் யானை அவதிப்பட்டு வந்தது.கால்நடை டாக்டர் பரிந்துரைப்படி, வனத் துறையினர், பழங்களில் மாத்திரை வைத்து, சிகிச்சை

கூடலுார் : பொக்காபுரம் பகுதியில், முதுகில் பலத்த காயத்துடன் சிரமப்பட்டு வந்த காட்டு யானைக்கு, 'கும்கி' யானைகள் உதவியுடன், வனத் துறையினர் சிகிச்சை அளித்தனர்.

நீலகிரி மாவட்டம், சிங்காரா வனச் சரகம், பொக்காபுரம் வனப் பகுதியில், முதுகில் பலத்த காயத்துடன், ஆண் யானை அவதிப்பட்டு வந்தது.கால்நடை டாக்டர் பரிந்துரைப்படி, வனத் துறையினர், பழங்களில் மாத்திரை வைத்து, சிகிச்சை அளித்தனர்.அந்த யானை தொட்லிங்கி அருகே, குறும்பர்பள்ளம் குடியிருப்பு பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ளது. நேற்று யானைக்கு நேரடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற கால்நடை துறை இணை இயக்குனர் மனோகரன், கால்நடை டாக்டர்கள் சுகுமாரன், ராஜேஷ்குமார், கோச்சலன் குழுவினர், காலை, 8:30 மணிக்கு, யானையின் உடலில் மயக்க ஊசி செலுத்தினர்.

தொடர்ந்து, கும்கி யானைகள் சுஜெய், வசீம் உதவியுடன், யானையின் காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''யானையின் முதுகில் ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ''தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் மீண்டும் சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X