திருப்பூர்:கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு மக்கள் வருவதை தவிர்க்க, சீரான இடைவெளியில் காலாவதியாகும் ஆவணங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பில் செப்., 31 வரை, புதுப்பிக்க தவறினாலும் லைசன்ஸ் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் அவகாசம் டிச., 31 வரை என தெரிவிக்கப்பட்டது.தற்போது, சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'டிச., 31 மற்றும் அடுத்தாண்டு, பிப்., வரை காலவதியாகும் பதிவு, லைசன்ஸ், சான்றிதழ், பெர்மிட் ஆகியவை, 2021 மார்ச், 31 வரை செல்லுபடியாகும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE