திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், புது பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணி இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தெற்கு பகுதியில் ஏற்கனவே இருந்த தார் சாலையை அகற்றி விட்டு, புதியதாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. ஒருபுறம் பணி முடிந்த நிலையில் நேற்று, இரண்டாம் பகுதியாக, பஸ் ஸ்டாண்ட் வடக்கு பகுதி நுழைவு வாயிலில் இருந்து, 200 மீ., துாரத்துக்கு தார் சாலை பெயர்தெடுக்கப்பட்டது.மழைநீர் வெளியேற விரிவான வடிகால் ஏற்படுத்தி, சிமென்ட் தரைத்தளம் அமைக்கப்படுகிறது. வடக்கு பகுதியில் பணி துவங்கியதால், திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் தெற்கு பகுதியில், கோவை பஸ் நிற்குமிடத்தில் இருந்து நேற்று முதல் இயக்கப்படுகிறது.விரைவு பஸ்களுக்கான முன்பதிவு மையம் தெற்கு நுழைவு வாயில் அருகே மாற்றப்பட்டுள்ளது. இதுவரை முன்பதிவு காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடந்தது. இனி, மாலை, 6:00 முதல் இரவு, 9:00 வரை செயல்பட உள்ளது. முன்பதிவு செய்ய விரும்புவோர் 99945-06012 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE