திருப்பூர்:அவிநாசி அருகே மீட்கப்பட்ட ஐந்து வயது குழந்தை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதனால், குழந்தையின் தாய் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளார்.அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகிலுள்ள, குப்பை சேகரிப்பு பகுதியில், கடந்த, 25ம் தேதி பெண் குழந்தை ஒன்று, மயங்கிய நிலையில் மீட்கப்பட்டது. உடல்நிலை மோசமாக இருக்கவே, திருப்பூரிலிருந்து, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.போலீசார் கூறியதாவது:கடந்த, நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து ஷர்மிளா சைலஜா குமாரி, தனது மகளுடன் வசித்து வருகிறார். 25ம் தேதி மதுரை செல்ல திட்டமிட்டு, மைசூரில் இருந்து கிளம்பியுள்ளார். வழியில், குழந்தைக்கு ஒரு பாட்டில் இருமல் மருந்து கொடுத்துள்ளார்.தொடர்ந்து, டாக்டரும், எலி மருந்தை சாப்பிட்டார். இருவரும், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த, அவரது கணவர், பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது. அடிக்கடி வலிப்பு வருவதால், குழந்தையின் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. குழந்தைக்கு வேறு ஏதாவது விஷம் கலந்த பொருள் வழங்கப்பட்டதா என்ற கோணத்திலும், தாயாரிடம் விசாரணை நடக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE