திருப்பூர்:நான்கு சக்கர வாகனங்களில், கூடுதலாக 'கிராஷ் கார்டு' எனப்படும் பம்பர்கள் அதிகளவில் பொருத்தப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் இணைப்புகளை பொருத்தக்கூடாது என, ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.வாகன விபத்து தொடர்பான கோர்ட் உத்தரவால், போலீசார் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இது போன்ற கூடுதல் பம்பர்களை பொருத்தியுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆனால், திருப்பூர் மாவட்டத்தில், அரசு அலுவலர்கள் மட்டுமின்றி போலீசாரின் வாகனங்களில், இத்தகைய பம்பர் இன்னும் அகற்றவில்லை. பொதுமக்கள் பலரும், தாமாக முன்வந்து, பம்பர்களை அகற்றி வரும் நிலையில், அரசு அலுவலர்களின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.வாகன ஓட்டிகள் கூறுகையில், 'தொலைதுார பயணத்தின்போது, போலீசார் சோதனையில், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, பம்பர் அகற்றப்படுகிறது.ஆனால், அரசு அலுவலர்களின் வாகனங்களில் பம்பர் குறித்து எவரும் கண்டுகொள்வதில்லை. அரசு உயரதிகாரிகளே, கோர்ட் உத்தரவை மதிப்பதில்லை,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE