பொது செய்தி

தமிழ்நாடு

'சனி பிடித்தால் யாரும், பயப்பட வேண்டாம்!' திருச்சி கல்யாணராமன் பேச்சு

Added : டிச 29, 2020
Share
Advertisement
அவிநாசி:''சனி பிடித்தால், யாரும் கவலைப்படாதீர்கள். ஆலய வழிபாடு ஒன்றே, சனி பகவானின் பார்வையிலிருந்து காப்பாற்றும் உபாயம்,'' என, திருச்சி கல்யாணராமன் பேசினார்.அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தர் பேரவை சார்பில், ஸ்ரீ வியாஸராஜா பஜனை மண்டபத்தில், கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.நேற்று முன்தினம் 'நள சரித்திரம்' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர்

அவிநாசி:''சனி பிடித்தால், யாரும் கவலைப்படாதீர்கள். ஆலய வழிபாடு ஒன்றே, சனி பகவானின் பார்வையிலிருந்து காப்பாற்றும் உபாயம்,'' என, திருச்சி கல்யாணராமன் பேசினார்.அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தர் பேரவை சார்பில், ஸ்ரீ வியாஸராஜா பஜனை மண்டபத்தில், கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.நேற்று முன்தினம் 'நள சரித்திரம்' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:எந்த வீட்டில் பெண் துன்பப்படுகிறாளோ, அங்கு மஹாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள். நம் வீட்டுக்கு வரும் பெண்ணை ஒரு நாளும் கவலைப்படுத்த கூடாது. அவள் கண்ணீர் சிந் தினால், புகுந்த வீட்டுக்குத்தான் சிரமம் ஏற்படும்.நம் பெண்ணாக இருந்தாலும் சரி, பிறர் வீட்டு பெண்ணாக இருந்தாலும் சரி, மதித்து நடக்க வேண்டும். அதேபோல, மனைவியின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். அவ்வாறு, கேட்காததால், நள மகாராஜா, மிகவும் துன்பப்பட்டார். சூதாட்டம் ஆடி, நாடு, சொத்து, செல்வம் என அனைத்தையும் இழந்தார்.அவரின் கதை, எல்லோருக்கும் பாடமாக உள்ளது. இதேபோல, ஆஞ்சநேயரை பிடித்த சனியை, அவர் காலால் மதித்து அடக்கினார். அப்போது, சனி பகவானிடம், 'நீ யாரை பிடித்தாலும், என்னை வழிபட்டால், தோஷம் நீங்க செய்ய வேண்டும்,' என ஆஞ்சநேயர் கூறினார்.அதனால், ஏழரை சனி, அஷ்டமச்சனி, கண்டக சனி, அர்த்தாஷ்ட சனி, இவ்வாறு எந்தவிதமான சனி பிடித்தாலும் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். குறிப்பாக, சிவ பெருமான், பெருமாள் மற்றும் ஆஞ்சநேய வழிபாடு, உங்களை காக்கும். சனி பிடித்து விட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள். இறைவனை வழிபடுங்கள், நல்லதே நடக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.கம்பராமாயண தொடர் சொற்பொழிவு, ஜன., 12ம் தேதி வரைதினமும், மாலை, 6:30 முதல், இரவு, 8:00மணி வரை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X