திருப்பூர்:நஞ்சப்பா பள்ளி வளாகத்தில், விஷமிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால், வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட பலர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் நடமாட்டம், பள்ளி வளாகத்தில் அதிகரித்து விட்டது.கடந்த ஆக., 15ல், பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பு சார்பில், 100 மரக்கன்று நடப்பட்டு, கூண்டு அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழையும் நபர்கள், சில மரக்கன்றுகளையும், பாதுகாப்புக்கு வைத்த கூண்டையும் சேதப்படுத்தியுள்ளனர்.பள்ளி மைதானத்தில், காலியான மது பாட்டில் சிதறிக்கிடக்கின்றன. வளாகத்தில் உள்ள பயன்பாடில்லாத கட்டடத்தின் மேற்பகுதியில், சிலர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்திருக்கிறது.பள்ளியின் சுற்றுச்சுவர், அதன் மீதுள்ள முள் கம்பிவேலியை சேதப்படுத்தி, அத்துமீறி உள்ளேநுழைந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.முன்னாள் மாணவர் சங்கத்தினர் கூறுகையில், 'பள்ளிக்குள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்களால், பள்ளி வளர்ச்சி தடைபடும்.இதுபோன்ற சமூக விரோதிகளின் செயலால், பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டும், பயனளிப்பதில்லை.பள்ளி வளாகத்தில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அத்துமீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE