திருப்பூர்:திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், 86 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை ரீதியான அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் வாசுகி, மனுக்களை பெற்றார். அதன்படி, 86 மனுக்கள் பெறப்பட்டன.பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தினர் அளித்த மனுவில், 'ஆங்கில புத்தாண்டு விழா, கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.எனவே, வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வியாழன் இரவு, 10:00 முதல், நள்ளிரவு, 1:30 மணி வரை ஆசீர்வாத ஜெபமும், ஆராதனை நடத்தவும் அனுமதிக்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.l குண்டடம், மொலாரப்பட்டி கிராமத்தினர், 'காளிகை கிராமத்தில், நல்ல நிலையில், கட்டடம் ஒன்று உள்ளது. அதில், மினி கிளினிக் அமைக்க வேண்டும். இதனால், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பயன்பெறுவர்,' என வலியுறுத்தி உள்ளனர்.l மங்கலம் அருகே, 63 வேலம்பாளையம் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், 'அறிவொளி நகரில், புதிதாக 'டாஸ்மாக்' கடை திறக்கப்படவுள்ளது. கடை திறக்கப்பட்டால், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவர். பொது அமைதியும் இருக்காது. எனவே, டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக் கூடாது,' என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.l ஊத்துக்குளி, செட்டியாகவுண்டம் பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், ''இப்பகுதியில் அதிகப்படியான மக்கள் வசித்து வருகின்றனர். பலரும், கூலி வேலைக்கு சென்று திரும்பும் நிலையில், ஏழ்மை நிலையில் உள்ளனர். இங்குள்ள மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE