சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடையை அகற்ற மக்கள் உண்ணாவிரதம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், முருகம்பாளையத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. பள்ளி, கோவில், பனியன் நிறுவனம் உள்ள நிலையில், மக்கள் எதிர்ப்பை மீறி புதியதாக 'டாஸ்மாக்' மதுக்கடை அமைக்கப்பட்டது.மக்களுக்கு இடையூ றாக உள்ளதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த மக்கள், அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கலெக்டர், எம்.எல்.ஏ., என, பலரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக எவ்வித

திருப்பூர்:திருப்பூர், முருகம்பாளையத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. பள்ளி, கோவில், பனியன் நிறுவனம் உள்ள நிலையில், மக்கள் எதிர்ப்பை மீறி புதியதாக 'டாஸ்மாக்' மதுக்கடை அமைக்கப்பட்டது.மக்களுக்கு இடையூ றாக உள்ளதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த மக்கள், அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கலெக்டர், எம்.எல்.ஏ., என, பலரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இச்சூழலில், மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் நேற்று காலை ஈடுபட்டனர். வீரபாண்டி போலீசார் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்துக்கு போடப்பட்ட பந்தல், நாற்காலி ஆகியவற்றை அகற்றப்பட்டது.போலீஸ் பேச்சு நடத்தியும் போராட்டத்தை கைவிட மக்கள் முன்வரவில்லை. பந்தல் அகற்றப்பட்ட நிலையில், மக்கள் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X