பல்லடம்:மின்வாரிய செயற்பொறியாளரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் வேலுசாமி, 32. மனைவி ஜனனி, 25. தம்பதிக்கு, 2 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வேலுசாமியின் வீட்டுக்கு சென்ற ஜனனி, அவரது உறவினர்களிடம் சத்தம் போட்டுள்ளார். இது குறித்து அறிந்த வேலுசாமி, தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம், ஜனனியின் வீட்டுக்கு சென்றார்.இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, காயமடைந்த சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சூழலில், வேலுசாமியை கைது செய்யக்கோரி ஜனனியின் உறவினர்கள், - திருப்பூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார், 'நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE