பல்லடம்:செஞ்சேரிமலையில், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், 'நீரா' குறித்த கருத்தரங்கம் நடந்தது.வனம் அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராமச்சந்திரன், மோகன் மந்த்ராசலம், மற்றும் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'நீரா' ஆலோசகர் காளிங்கராஜ் தர்மலிங்கம் பேசியதாவது:விளைவிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றும்யுக்தி விவசாயிகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் தான், விவசாய தொழில் நஷ்டத்தில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.தென்னையிலிருந்து தயாரிக்கப்படும் 'நீரா' எனும் இயற்கை பானம் விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும். ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளதால், இயற்கை பானமான 'நீரா'வை சந்தைப்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும். தென்னை விவசாயிகள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த விவசாய தொழிலையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE