பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை மையம் அதிகரிப்பு

Added : டிச 29, 2020
Share
Advertisement
ஊட்டி:நீலகிரி சட்டசபை தேர்தலுக்கு, ஓட்டு எண்ணிக்கை மையம், 885 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி ஆகிய மூன்று தொகுதிகளில், 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர். மூன்று தொகுதிகளில், 683 ஓட்டுச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு ஒட்டு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு மையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. ஓட்டு

ஊட்டி:நீலகிரி சட்டசபை தேர்தலுக்கு, ஓட்டு எண்ணிக்கை மையம், 885 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி ஆகிய மூன்று தொகுதிகளில், 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர். மூன்று தொகுதிகளில், 683 ஓட்டுச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு ஒட்டு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு மையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. ஓட்டு எண்ணிககை நடக்கும் அரசு பாலிடெக்னிக் மையத்திலும், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு நடந்தது. தொடர்ந்து, தேர்தல் பணிகள் நடந்து வருகிறது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில்,''சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தேவையான அளவு மின்னணு ஓட்டுபதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, 1,000 பேருக்கு மேல் வாக்காளர்கள் உள்ள ஓட்டு சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் பாதிக்காமல் ஓட்டளித்து செல்ல, ஓட்டு எண்ணிக்கை மையம், 885 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X