சென்னை : தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர். பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என, 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 63 ஆயிரத்து, 242 மாதிரிகள், நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 285; கோவையில், 93 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 1,005 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பிரிட்டனில் இருந்து வந்த யாருக்கும் நேற்று, தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதுவரை, பிரிட்டனில் இருந்து வந்த, 13 பேர்; தொடர்பில் இருந்த, 15 பேர் என, 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை, 1.39 கோடி மாதிரிகள் பரிசோதனையில், எட்டு லட்சத்து, 15 ஆயிரத்து, 175 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சையில் இருந்தோரில், 1,074 பேர் நேற்று குணமடைந்தனர். இவர்களுடன், ஏழு லட்சத்து, 94 ஆயிரத்து, 228 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, சென்னையில், 2,774; கோவையில், 847 என, 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று, 11 பேர் உட்பட, இதுவரை, 12 ஆயிரத்து, 80 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 8,867 பேருக்கு தொடருது சிகிச்சைசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 63 ஆயிரத்து, 242 மாதிரிகள், நேற்று பரிசோதிக்கப்பட்டன.
அதில், சென்னையில், 285; கோவையில், 93 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 1,005 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பிரிட்டனில் இருந்து வந்த யாருக்கும் நேற்று, தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதுவரை, பிரிட்டனில் இருந்து வந்த, 13 பேர்; தொடர்பில் இருந்த, 15 பேர் என, 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை, 1.39 கோடி மாதிரிகள் பரிசோதனையில், எட்டு லட்சத்து, 15 ஆயிரத்து, 175 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தோரில், 1,074 பேர் நேற்று குணமடைந்தனர். இவர்களுடன், ஏழு லட்சத்து, 94 ஆயிரத்து, 228 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, சென்னையில், 2,774; கோவையில், 847 என, 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா தொற்றால் நேற்று, 11 பேர் உட்பட, இதுவரை, 12 ஆயிரத்து, 80 பேர் இறந்து உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE