பொது செய்தி

தமிழ்நாடு

வழக்குகள் நடத்துவதில் தாமதம் கூடாது பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுரை

Added : டிச 29, 2020
Share
Advertisement
சென்னை : 'நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில், சட்டம், விதிகள் மற்றும் செயல்முறைகளுக்கு ஏற்ப, சி.இ.ஓ., மற்றும், டி.இ.ஓ.,க்கள் செயல்பட வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:நீதிமன்ற வழக்கு தொடர்பான கோப்புகளை

சென்னை : 'நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில், சட்டம், விதிகள் மற்றும் செயல்முறைகளுக்கு ஏற்ப, சி.இ.ஓ., மற்றும், டி.இ.ஓ.,க்கள் செயல்பட வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:நீதிமன்ற வழக்கு தொடர்பான கோப்புகளை சிறப்பு கவனத்துடன் கையாண்டு, உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் பணியை சரியாக செய்யாததும், காரணமின்றி காலம் கடந்துவதும், நீதிமன்ற வழக்குகள் அதிகமாக முக்கிய காரணம்.வழக்குகளின் முக்கிய கருத்துக்களை, அரசு வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைத்து, உரிய காலத்தில், நீதிமன்றத்துக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வழக்கில், அரசு செயலர், இயக்குனர், இணை இயக்குனர்கள் பிரதிவாதியாக இருந்தாலும், மாவட்ட கல்வி அலுவலர்கள், வழக்கு சார்ந்த விபரங்களை சமர்ப்பிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதிமன்ற வழக்குகள் அதிகரிக்காத வகையில், சி.இ.ஓ., மற்றும், டி.இ.ஓ.,க்கள் செயல்பட வேண்டும். சட்டம், விதிகள், அரசாணை மற்றும் அதிகாரிகளின் செயல்முறைகள் ஆகியவற்றிற்கு உட்பட்டு, நீதிமன்ற தீர்ப்பாணைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாணை பிறப்பிக்க வேண்டுமென்றால், தாமதமின்றி உரிய விபரங்களுடன், இயக்குனர் வழியே கருத்துருவை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தீர்ப்புகள், உத்தரவுகள் வந்தால், அவற்றை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வராத வகையில், நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வந்தால், உரிய விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து, முடிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X