சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை இல்லாததால் பாதிப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி அட்டவளை பாரதிநகர் கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு, உண்ணாவிர போராட்டம் நடந்தது.கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டவளை பாரதிநகர் கிராமத்தில், 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்துக்கான, சாலை வசதி இல்லாததால், சிரமப்பட்டு வருகின்றனர். 'சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தி, குன்னுார்- -கோத்தகிரி சாலையில், அட்டவளை பிரிவில்,

கோத்தகிரி:கோத்தகிரி அட்டவளை பாரதிநகர் கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு, உண்ணாவிர போராட்டம் நடந்தது.கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டவளை பாரதிநகர் கிராமத்தில், 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்துக்கான, சாலை வசதி இல்லாததால், சிரமப்பட்டு வருகின்றனர். 'சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தி, குன்னுார்- -கோத்தகிரி சாலையில், அட்டவளை பிரிவில், நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், குன்னுார் டி.எஸ்.பி., சுரேஷ் மற்றும் போலீசார்,பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர். அதில்,'விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது. மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X