சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'யானை பிரச்னைக்கு தீர்வு வேண்டும்': தமிழக - கேரள சாலையில் மறியல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை கொம்பன் யானை மூன்று பேரை கொன்றது. அதனை பிடிக்க நடவடிக்கை எடுத்த போது, யானை கேரள வனப்பகுதிக்கு சென்றது. கண்காணிப்பு தொடர்கிறது.தற்போது, சப்பாந்தோடு, குழிவயல் பகுதிகளில், 10 யானைகள் முகாமிட்டு, மக்களை விரட்டி வருகின்றன. இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண

பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை கொம்பன் யானை மூன்று பேரை கொன்றது. அதனை பிடிக்க நடவடிக்கை எடுத்த போது, யானை கேரள வனப்பகுதிக்கு சென்றது. கண்காணிப்பு தொடர்கிறது.தற்போது, சப்பாந்தோடு, குழிவயல் பகுதிகளில், 10 யானைகள் முகாமிட்டு, மக்களை விரட்டி வருகின்றன. இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, பொதுமக்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தை நடத்துவதாக. அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சேரம்பாடி சுங்கம் பகுதிக்கு வந்தனர். அதிகாரிகள் ஒரு சிலரை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், தமிழக--கேரள இணைப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்ந்து, பொதுமக்கள் முன்னிலையில், எம்.எல்.ஏ., திராவிடமணி, உதவி வனப்பாதுகாவலர் விஜயன், டி.எஸ்.பி., அமீர்அகமது, வனச்சரகர்கள் மனோகரன், சின்ன தம்பி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில்,'யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்தி பொது மக்களை பாதுகாக்க வேண்டும்; வனப்பகுதியை ஒட்டி தனிநபர்கள் அமைத்துள்ள சோலார் மின்வேலியை அகற்ற வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.'இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். 'ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,' என, மக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X