கராச்சி : பாகிஸ்தானில், ஆண்டுக்கு, 1,000க்கும் அதிகமான சிறுபான்மையின பெண்கள், கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான பாக்., மக்கள் தொகை, 22 கோடி; அதில், ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினர், 3.6 சதவீத அளவிற்கே உள்ளனர். இதனால், சிறுபான்மை பெண்களை கடத்துவது, பாலியல் பலாத்காரம் செய்வது, மத மாற்றம் செய்து, திருமணம் புரிவது போன்ற செயல்கள், சாதாரணமாக நடக்கின்றன. இந்த வகையில், ஆண்டுக்கு, 1,000 பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர்.சமீபத்தில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த, நேஹா, 14, என்ற, கிறிஸ்துவ சிறுமியை, கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றி, 45 வயதுள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில், திருமணமாகி, இரு பிள்ளைகள் உள்ள அந்த நபர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.'மாபியா' வலைதளங்கள், சிறுபான்மையின பெண்களின் விபரங்கள் வாயிலாக பணம் சம்பாதிக்கின்றன. இஸ்லாமிய மத குருமார்கள், சிறுமியை கூட, கிழவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த திருமணத்திற்கு, ஊழல் மாஜிஸ்திரேட்டுகளும் சட்டபூர்வ ஒப்புதல் அளிக்கின்றனர். இது பற்றி புகார் கூறினால், ஊழல் போலீசார், அதை விசாரிக்க மறுப்பதாக கூறுகிறார், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த, ஜிப்ரன் நசீர்.கராச்சியில், அர்சூ ராஜா, 13, என்ற கிறிஸ்துவ சிறுமியை கடத்தி, மத மாற்றம் செய்து, முதியவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதையடுத்து, திருமணத்தை நடத்தி வைத்த, இஸ்லாமிய மத குரு, குவாசி அகமதுவுக்கு கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. இருந்தும், அவர், கராச்சியில் சுதந்திரமாக நடமாடி வருவதாக, 'தி அசோசியேட்டட் பிரஸ்' என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE