சபரிமலை : கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல காலம் முடிந்த நிலையில், மகர விளக்குக்காக நாளை மாலை, மீண்டும் நடை திறக்கப்படுகிறது.'
மண்டல காலத்தில், நிலக்கல்லில் செயல்பட்ட கொரோனா பரிசோதனை மையம், மகரவிளக்கு காலத்தில் செயல்படாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் தங்கள் ஊரில் அல்லது வரும் வழியில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் சபரிமலை வரவேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில், நாளை மறுதினம் முதல், தினமும் 5,000 பக்தர்களுக்கு, தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இதற்கான முன் பதிவு, நேற்று மாலை, 6:00 மணிக்கு துவங்கியது; ஒரு சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE