தமிழ்நாடு

'கொரோனா நிவாரணத்திற்கு ரூ.7544 கோடி செலவு'

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: ''கொரோனா நோய் சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக 7544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்'' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்'
 'கொரோனா நிவாரணத்திற்கு ரூ.7544 கோடி செலவு'


சென்னை: ''கொரோனா நோய் சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக 7544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை விழிப்புடன் கண்
காணிக்க வேண்டும்'' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிரிட்டனில் பரவி வரும் கொரோனா தொற்று தமிழகத்திற்குள் பரவி வருவதாக செய்திகள் வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழி முக கவசம் அணிவது தான். ஆனால் நோய் தொற்று குறைந்து வருவதால் பொது மக்கள் முக கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இந்த உருமாறிய வைரஸ் தொற்றும் முக கவசம் அணியாததால் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றினால் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயம்.
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக 7544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.


latest tamil news


இதுவரை 6.17 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 3.27 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 12.59 லட்சம் பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.
ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 'அம்மா மினி கிளினிக்' துவக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக துவக்கப்படும். ஒவ்வொரு கிளினிக்கிலும் தினமும் 75 பேர் முதல் 125 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடு நடவடிக்கைக்கு மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருவதால் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் விழிப்புடன் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நோய் தொற்று பரவல் 5.84 சதவீதமாக உள்ளது. தற்போது 8947 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு 1.45 சதவீதமாக உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.


மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை

தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார் பங்கேற்றனர். தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பு முதுநிலை மண்டல குழுத் தலைவர் அரண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு நாளை மறுதினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
29-டிச-202011:00:46 IST Report Abuse
S.Ganesan வெறும் தகரம் அடித்ததற்கா 7544 கோடி ? தினமும் கொரோனா பாதித்தவர்கள் கணக்கு உயரும்போதே சந்தேகம் வந்தது.ஊழல் உண்மையாகி விட்டது
Rate this:
Cancel
aravindhan - singapore,சிங்கப்பூர்
29-டிச-202010:56:53 IST Report Abuse
aravindhan இந்த பணத்தில் உண்மையாக செலவு செய்தது எவ்வளவு என்று பல மாதங்களாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. மிகப்பெரும்பகுதி செலவு செய்யாமலேயே அமுக்கப்பட்டுவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். காமதேனு போல் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர்.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
29-டிச-202009:20:14 IST Report Abuse
Raj Thief’s year
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X