ஆமதாபாத் : குஜராத்தில், வீட்டின் பூட்டிய அறைக்குள், 10 ஆண்டுகளுக்கும் மேல் வசித்த இரு சகோதரர்கள், அவர்களின் சகோதரி ஆகியோரை, தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர்.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. மன பாதிப்புஇங்குள்ள ராஜ்கோட் நகரில், 10 ஆண்டுகளுக் கும் மேல், வீட்டின் இருண்ட அறைக்குள் இரு சகோதரர்கள், சகோதரி ஆகியோர் தங்களை பூட்டிக்கொண்டு வசித்துள்ளனர். அவர்களின் தந்தை உதவியுடன், மூவரையும் நேற்று முன்தினம் தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர்.
இதுகுறித்து, தொண்டு நிறுவனத்தினர் நேற்று கூறியதாவது:ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் மகனும், வழக்கறிஞருமான அம்ரிஷ், 42, 'சைக்காலஜி' பட்டதாரியான மகள் மேக்னா, 39, பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இளைய மகன் பாவேஷ், 30 ஆகியோர், கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேல், வீட்டின் ஓர் அறைக்குள் தங்களை பூட்டிக்கொண்டு இருந்துள்ளனர். உடல்நிலை பாதிப்பால், அவர்களது தாயார், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆழமான மன பாதிப்பால், இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
தந்தை கூறியதை அவர்கள் கேட்கவில்லை. இதனால், அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கியுள்ளார்.ஏற்பாடுஅறைக்குள் ஆங்காங்கே மலம், உணவு பொருட்கள் மற்றும் செய்திதாள்கள் சிதறிக் கிடந்தன. தலைமுடி, தாடியுடன், 'அகோரி'கள் போல் தோன்றினர். எழுந்து நிற்க முடியாமல், பலவீனமாக இருந்தனர்.இதனால் மூவருக்கும் மொட்டை அடித்துள்ளோம். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, தந்தை கூறுவதால், உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE