அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : 'கரடி' விடுறாங்களே...

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ். ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதி என்றாலே புருடா விடுவோர் தான் என்பதை, இந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவோம். எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் முழு மெஜாரிட்டி பெற்று, முதல்வராக அமரும் கனவில் இருக்கிறார், கமல். அதற்காக, கமலின் கட்சியான, மக்கள் நீதி

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

எஸ். ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதி என்றாலே புருடா விடுவோர் தான் என்பதை, இந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவோம். எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் முழு மெஜாரிட்டி பெற்று, முதல்வராக அமரும் கனவில் இருக்கிறார், கமல். அதற்காக, கமலின் கட்சியான, மக்கள் நீதி மையத்தின் பொதுச் செயலரான குமாரவேல், 'புதுக் கரடி' ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறார். அதாவது, 'மறைந்த எம்.ஜி.ஆர்., தான், கமலை அரசியலுக்கு அழைத்தார்' எனக் கூறியுள்ளார். தற்போது, எம்.ஜி.ஆர்., உயிருடன் இல்லை. இருந்திருந்தால், 'எப்போது அழைத்தேன்?' என, அவரே நேரடியாக கேட்டிருப்பார்.latest tamil news
அது சரி... எம்.ஜி.ஆர்., அழைத்த போதே, கமல் ஏன் அரசியலுக்கு வரவில்லை? எவ்வளவு பெரிய செல்வாக்குமிக்க மனிதர், அவர். பெரும் இயக்கத்தின் தலைவர், தமிழகத்தின் முதல்வர்... அப்படிப்பட்டவர் அழைக்கும் போது, கமல், அரசியலுக்கு வந்திருக்க வேண்டியது தானே முறை. எம்.ஜி.ஆரின் அழைப்பை புறக்கணிப்பது தான், அவர் மீது கமல் வைத்திருந்த மரியாதையா? அப்போதே அரசியலுக்கு வந்திருந்தால், ஓர் அமைச்சராகி, இப்போது, 'நீதி, நேர்மை' என, கடை விரித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே.


latest tamil news
கமலின் அந்த நேர்மையைக் கண்டு, எம்.ஜி.ஆரும் பாராட்டி இருப்பார்; மக்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பர். கமலின் நேர்மையைக் கண்டு, மற்ற அமைச்சர்களும் அடக்கி வாசித்திருப்பரே! மறுப்பு சொல்ல ஆளில்லை என்பதற்காக, இப்படியெல்லாமா, 'கரடி' விடுவது? அரசியலில் இறங்கிவிட்டால், இது போன்ற பல புருடாக்களை அள்ளி வீசித் தான் ஆக வேண்டியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-டிச-202021:24:25 IST Report Abuse
chandrakumar என்னை கூட MGR வரிசா அறிவிக்க ஆசைபட்டார். 😂😂😂😂. கரடி இல்ல டைனொசர் புளுகு மைய்யம்
Rate this:
Cancel
ராஸ்கோலு - madurai,இந்தியா
29-டிச-202019:56:14 IST Report Abuse
ராஸ்கோலு இப்ப நம்ம சைமன் அண்ணா கூடத்தான் இல்லாதவங்கள வச்சு ஒரு கதைய உருவாக்கி டைரக்ஸன் பண்ணி மேடையிலேயே ஆன் தி ஸ்பாட் பிலிம் காட்டி முடிச்சுட்றாரு, நாம விசிலடிச்சு ரசிக்கல்லையா? அப்பிடித்தான் இதுவும்.
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
29-டிச-202019:00:15 IST Report Abuse
Madhusoodhana Ramachandran பீலா விடுவது இப்போது ஒரு வழக்க்கமாகிவிட்டது. கமழும் விதிவிக்கல்ல. அனால் பேதம் காரியத்தில் காட்டினாள் போற்ற தக்கது.பத்தோடு பதினொன்று என்பதாக இருக்கக்கூடாது.தகிடு தித்ததிற்கு ஏற்க்கனவே ஒரு கட்சி குத்தகை எடுத்து விட்டது. எவர் ஏதாவது புதிதாக மக்களை ஏமாற்ற வழி பார்க்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X