1. திருப்பூர்: இளம்பெண் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, காதலனும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

2. நான்கு மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி
கோவை:தனது சொத்தை அபகரித்துக்கொண்டதாக கூறி, அன்னுாரை சேர்ந்த நான்கு மூதாட்டிகள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு, பணி நிமித்தமாக நேற்று வந்திருந்த அன்னுார் தாசில்தார், மூதாட்டிகளிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அன்னுார் தாசில்தார் அலுவலகம் வரும்படியும், பிரச்னை குறித்து பேசி தீர்வு காணலாம் என்றும் கூறியதால், மூதாட்டிகள் நம்பிக்கையுடன் கிளம்பி சென்றனர்.
3. ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் பாட்டில் வீச்சு
உத்தமபாளையம் : தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் பள்ளி ஆசிரியர் சேகர் 55, வீட்டில் நள்ளிரவு மர்மநபர்கள் பெட்ரோல் பாட்டில்களை வீசினர்.
4. 2 திருடர்கள் கைது 55 சவரன் பறிமுதல்
வானுார் : ரோவில் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, 55 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

5. ரூ.3,500 லஞ்சம் பெற்ற ஊழியர் கைது
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் சண்முகம், 50. இவர், 'தன் வீட்டிற்கு வரி அதிகமாக உள்ளது; அதை குறைத்து தரவேண்டும்' என, நகராட்சியில், வரி வசூல் செய்யும் பணியாளர் ஆனந்தகுமார், 23, என்பவரிடம் கேட்டுஉள்ளார்.அவர், 7,000 ரூபாய் லஞ்சமாக கேட்டு, 5,000 ரூபாய்க்கு ஒப்புக் கொண்டார். முதல் தவணையாக, 3,500 ரூபாய் தருவதாக சண்முகம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் சண்முகம் புகார் செய்தார். நேற்று காலை, பணத்தை, ஆனந்தகுமார் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.
6. கள்ளக்காதலன் மீது ஆசிட் வீச்சு ; பெண் மீது வழக்கு
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண் உட்பட நான்கு பேர் மீது பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தியாவில் குற்றங்கள்
இளைஞர் நிர்வாண ஊர்வலம்: ராஜஸ்தானில் 8 பேர் கைது
கோட்டா : ராஜஸ்தானில், பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞரை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்துச் சென்ற, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலக குற்றங்கள் :
பாக்.,கில் அதிகரிக்கும் மத மாற்றம்
ராச்சி : பாகிஸ்தானில், ஆண்டுக்கு, 1,000க்கும் அதிகமான சிறுபான்மையின பெண்கள், கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. சிந்து மாகாணத்தைச் சேர்ந்த, நேஹா, 14, என்ற, கிறிஸ்துவ சிறுமியை, கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றி, 45 வயதுள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், திருமணமாகி, இரு பிள்ளைகள் உள்ள அந்த நபர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE